26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
carrot lemom rice
சமையல் குறிப்புகள்

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்:

* பாஸ்மதி அரிசி – 1 கப்

* எலுமிச்சை சாறு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)

* கேரட் – 1 (துருவியது)

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

carrot lemom rice

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், முந்திரி மற்றும் வேர்க்கடலையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

* அதன் பின் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

* பிறகு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளற வேண்டும்.

* அதன் பின் வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.

Related posts

சுவையான… வரமிளகாய் சட்னி

nathan

சூப்பரான முட்டை ப்ரைடு ரைஸ்!

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

nathan

ஆரோக்கியமான ராகி தோசை

nathan

தக்காளி குழம்பு

nathan

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

கேரளா ஸ்டைல் கடலை கறி

nathan

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

sangika