31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிரபல மலையாள நடிகர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா-

பிரபல மலையாள நடிகர் ஒருவரின் வீட்டிற்கு திடீர் விஜயம் செய்து நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சூர்யாவும், ஜோதிகாவும் படத்தில் ஜோடியாக நடிக்கும் போது காதலித்து பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா தனது 36வது வயதில் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார். அதையடுத்து ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் காதல் என்ற மலையாள படம் தற்போது தயாராகி வருகிறது.அப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். சமீபத்தில் காதல் படப்பிடிப்பிற்கு சென்ற நடிகர் சூர்யாவிற்கு மம்முட்டி பிரியாணி சமைத்தார். இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மற்றொரு மலையாள நடிகரின் வீட்டிற்கு சூர்யாவும், ஜோதிகாவும் திடீர் விசிட் செய்தனர். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் வீட்டிற்கு தனது அன்பு மனைவி ஜோதிகாவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூர்யா. பின்னர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதிகாவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதற்கு “உற்சாகமான நண்பர்கள்” என்று தலைப்பிட்டார்.

ராதாமோகன் இயக்கிய மொழிபடத்தில் நடிகை ஜோதிகாவும், நடிகர் பிருத்விராஜும் ஜோடியாக நடித்தனர். இது ஒரு நட்பு சந்திப்பு என்று பிருத்விராஜ் குறிப்பிட்டார், ஆனால் ரசிகர்கள் பிருத்விராஜ் சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

Related posts

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் ‘கல்கி 2898 AD’ பட விழாவில் தீபிகா படுகோன்!

nathan

ஹீரோயின்களை மிஞ்சும் கவினின் மனைவி..

nathan

தமன்னா தொடையை காட்டியதால் தான் ஓடிச்சு.. ஜெயிலர் ஒரு மண்ணும் கிடையாது..

nathan

பிரபல கிரிக்கெட் வீரரை 2-வது திருமணம் செய்துகொண்டாரா விஜே ரம்யா?

nathan

நயன்தாரா 75 – Glimpse வீடியோ வெளியானது

nathan

கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 20 பேர் கைது

nathan

ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்

nathan

‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ -மாறியது எப்படி?

nathan

வைரலாகும் விஜயின் அன்னையர் தின வாழ்த்து!

nathan