23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
3
சைவம்

வெஜ் குருமா

தேவையானவை: கேரட் – 2, உருளைக்கிழங்கு, நூக்கல் – தலா ஒன்று, பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 5 பல், ஏலக்காய் – 3, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, லவங்கம் – 5, தேங்காய் – அரை மூடி, முந்திரி – 10, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை – தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.
3

Related posts

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan

செட்டிநாடு பக்கோடா குழம்பு

nathan

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan

புடலங்காய் குழம்பு செய்ய…

nathan