29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
p41a
உடல் பயிற்சி

இடை மெலிய எளிய பயிற்சிகள்–உடற்பயிற்சி

உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளைச் சொல்லித் தருகிறார் உடற்பயிற்சியாளர் பிரபாகரன்.

p41a
ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்
(Hip twister Stick Workouts)
இந்தப் பயிற்சியைச் செய்பவர்கள், அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.

* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். வலது கை, வலது காலைத் தொடுவதுபோல் வளைத்து, திரும்பவும் பழைய நிலைக்கு வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்யவேண்டும்.
p16
* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.
பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்புப் பகுதியின் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்துவிடும்.

சைடு வே ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங்
(Side Way Hand Stretching)
கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியபடி வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை, இடது கையால் இறுகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இரண்டு கைகளும் காது பகுதியை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
p41b
மூச்சை அடி வயிறு வரை இழுத்து வலது மற்றும் இடது புறம் கையை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும்.
பலன்கள்: உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் வலுவடையும். அடி வயிற்றின் தசைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகளைக் கரைத்துவிடும்.

பேக் வேர்ட் ஸ்ட்ரெச்சிங் வொர்க் அவுட்ஸ்
(Backward Stretching Work Outs)
இரண்டு கால்களையும் அகட்டி, கை பந்தை மார்பு பகுதியின் நடுவில் வைத்துக் கொள்ளவும்.
p41c
வலது புற இடுப்புப் பகுதி வரை பந்தைக் கொண்டு வந்து வலது காலைத் தொட வேண்டும். இதே போல் இடது புறமும் திரும்பி இடது காலைத் தொடவும். இப்படி 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்
பலன்கள்: பக்கவாட்டுத் தசைகள் சீராகும். நாட்பட்ட முதுகு வலி உள்ளவர்கள்.தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யும்போது வலிகள் குறையும். தசைப் பிடிப்பு, மூச்சு பிடிப்பு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்

டவுன் வேர்டு சைடு ஸ்ட்ரெச்சிங்
(Downward Side Stretching)
இரண்டு காலையும் அகட்டியபடி நின்று வயிற்றுப் பகுதியின் மத்தியில் பந்தை வைத்துக் கொள்ளவும். அப்படியே வலது பக்கமாகத் திரும்பி கீழ் இருந்து மேல் நோக்கிப் பந்தைக் கொண்டு வர வேண்டும். இதே போல் இடது வலது என 20 முறை செய்ய வேண்டும்.
p41d
பலன்கள்: கால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடையும். கழுத்து, முதுகு, தோள்பட்டை, தசைகள் வலுவாகும். தொடர்ந்து இந்த உடற்பயிற்சியைச் செய்தால் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
ஆர்ம் வொர்க் அவுட்ஸ்
(Both Arm Ball Workouts)
இரண்டு கால்களையும் அகட்டியபடி கைகளில் பந்தை நேராக வைத்துக் கொண்டு வலது மற்றும் இடதுபுறம் கைகளை முழுமையாக அசைக்கவும். இதுபோல் 20 முறை செய்ய வேண்டும்.
p41e
பலன்கள்: வயிற்றுப் பகுதியின் தசைகள் சீராகும். வயிறு, மார்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகள் கரையும். ரத்த ஓட்டம் சீராகும்

Related posts

இடுப்பு, தொடை பகுதி சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்

nathan

மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

nathan

மூளை சுறுசுறுப்பாக இயங்க தினமும் 20 நிமிட யோகா

nathan

ஃபிட்டான தொடைக்கு எளிய 3 பயிற்சிகள்

nathan

கழுத்துவலியை குறைக்கும் அனுசாசன் முத்திரை

nathan

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள்!!!

nathan

தொப்பையை குறைக்கும் 2 முத்தான பயிற்சிகள்

nathan

உயரம் அதிகரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்

nathan

நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாக இந்த யோகாவை செய்யுங்கள்….

sangika