24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl4034
சிற்றுண்டி வகைகள்

ஜாமூன் கோப்தா

என்னென்ன தேவை?

வெங்காயம் – 2 டீஸ்பூன்,
குடைமிளகாய் – 2 டீஸ்பூன் (அரிந்தது),
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
பால் – 1/2 கப்,
காய்ந்த வெந்தய கீரை – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

கோப்தா செய்ய…

இன்ஸ்டன்ட் ஜாமூன் மிக்ஸ் – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 3,
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – (பொரிக்க) தேவையான அளவு.

கிரேவி செய்ய…

வெங்காயம் – 1,
தக்காளி – 1,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 2,
பாதாம் – 6,
வெள்ளரி விதை – 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்).

எப்படிச் செய்வது?

இன்ஸ்டன்ட் ஜாமூனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பாதாம், வெள்ளரி விதை சேர்த்து ஆறிய பின் அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து சீரகம் சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் அரைத்த விழுது மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு, சர்க்கரை, காய்ந்த வெந்தயக் கீரை மற்றும் பால் சேர்த்து 7நிமிடம் கொதிக்க விடவும். சாப்பிடு முன் ஜாமூன் கோப்தா, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
sl4034

Related posts

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா

nathan

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

nathan

முளைகட்டிய தானிய சப்பாத்தி

nathan

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சுறா புட்டு

nathan