24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
thop
தொப்பை குறைய

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சூப்பரான வழிகள் !

பெரும்பாலான மக்கள் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சனையில் ஒன்று தான் தொப்பை. இந்த தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் தொப்பையில் 4 வகைகள் உள்ளன. எப்போதும் நமக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும் முதல் காரணம் நாமாகத் தான் இருப்போம். அதேப் போல் தான் நாம் மேற்கொள்ளும் சில விஷயங்களால் தான் தொப்பை ஏற்பட்டு அவஸ்தையை உண்டாக்குகின்றன.

முதலில் ஒவ்வொருவரும் தங்களுக்கு இருப்பது எந்த வகையான தொப்பை என்பதை முதலில் தெரிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் முயற்சி செய்து வந்தால், நிச்சயம் விரைவில் குறைக்கலாம். இங்கு நான்கு வகையான தொப்பைகளும், அவற்றைக் குறைக்கும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துப் புரிந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையை சீக்கிரம் குறைக்கலாம்.

இந்த வகை தொப்பையில், கொழுப்புக்கள் அடிவயிற்றில் தங்குகின்றன. மேலும் இந்த வகை தொப்பையானது அளவுக்கு அதிகமாக பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி ஏதும் செய்யாமலிருப்பதால் வரும். முக்கியமாக ஒல்லியாக இருப்பவர்கள் உடலுழைப்பு இல்லாமல் இருந்தால் இந்த வகை தொப்பை வரும்.

தினமும் எளிய உடற்பயிற்சிகளான க்ரஞ்சஸ், சைக்கிளிங் மற்றும் சில சிட் அப்ஸ் செய்து வருவதோடு, பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம், இந்த வகை தொப்பையைக் குறைக்கலாம்.

இந்த வகை தவறான உணவுகளை உட்கொண்டு, அந்த உணவுகள் செரிமானமாகாமல் வீங்கி உப்பிய நிலையில் காணப்படும். மேலும் தவறான உணவுகளால் அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதோடு, வாயுக்களும் அதிகம் சேர்ந்திருக்கும். முக்கியமாக இந்த வகை தொப்பை பால், முட்டைக்கு அலர்ஜியானவர்களுக்கு வரக்கூடும்.

இந்த வகை தொப்பையைக் குறைக்க சரியான உணவுகளை உட்கொண்டு, ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவை முட்டைக்கோஸ், டர்னிப், பருப்பு வகைகள் மற்றம் பால் போன்றவை வாய்வு தொல்லை உண்டாக்குவதால், இந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும் உணவுகளைத் தவிர்த்து, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இந்த வகை அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்களுக்கு வரும். அதுவும் மன அழுத்தம் வந்தால், அது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை தூண்டி, அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர வழிவகுக்கும். முக்கியமாக இந்த வகை தொப்பை அதிகமாக வயிற்று பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு வரும்.

இந்த வகை தொப்பையைக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு உணவுகளை அளவாக பலமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் வயிற்றில் தாங்குவது தடுக்கப்படும். மேலும் நல்ல சரிவிகித உணவுகளான பழங்கள், காய்கறிகளை உட்கொண்டு வர வேண்டும்.

சிலருக்கு படிக்கட்டுக்கள் போன்று வயிறு இருக்கும். இது நீண்ட நேரம் ஒரே இடத்தில் தவறான நிலையில் அமர்ந்து வேலை செய்வோருக்கு வரும். இந்த வகை வயிற்றைக் கொண்டவர்களால் எந்த ஒரு உடையையும் சரியாக அணிய முடியாது. குறிப்பாக இந்த வகை வயிறு பெண்களுக்கு தான் இருக்கும்.

இந்த வகை வயிற்றைக் கொண்டவர்கள், தினமும் வாக்கிங் மேற்கொள்வதோடு, குளிர் பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களில் உணவுகள் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முக்கியமாக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிரம்பிய காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக தவறாமல் உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும்.
thop

Related posts

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை

nathan

தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

nathan

இந்த ஜூஸை தினமும் 2 கப் குடிச்சா, சீக்கிரம் தட்டையான வயிற்றைப் பெறலாம்!

nathan

தொப்பையைக் குறைக்கவா..? 15 நாட்களில் சிறந்த வழி.

nathan

பானை போல வயிறு இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தொப்பையை குறையுங்கள்! மறைக்காதீர்கள்! இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..

nathan