பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். “பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், “மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’ (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான். இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, “டிரான்ஸ் பேட்’ மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், “சி – சியாக்டிவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.
இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க “டிரான்ஸ் பேட்’ துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே.
இதோ சில வழிகள்:
* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக் கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.
* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.
* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.
* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.
* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.