27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
c0c1cb56 f07e 4455 991b 8d8b5d23fe4b S secvpf
சட்னி வகைகள்

வெங்காய கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 6 பற்கள்
கொத்தமல்லி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு :

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிய, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

* ஆறியதுமு மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பு, புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!
c0c1cb56 f07e 4455 991b 8d8b5d23fe4b S secvpf

Related posts

வெங்காய காரச்சட்னி

nathan

தேங்காய் தயிர் சட்னி

nathan

பீட்ரூட் சட்னி

nathan

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

காலிஃபிளவர் சட்னி

nathan

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

குழந்தைகளும் விரும்பும் சுவையான வெங்காய சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

nathan