30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1b4b65c7 a080 49dd 93e9 c22c92c67c11 S secvpf
பெண்கள் மருத்துவம்

பெண் மலடு கிடையாது

18 சித்தர்களின் வாக்குப்படி பெண் மலடு என்பது கிடையாது. மலட்டுத்தன்மை என்பது ஆண்களுக்கு மட்டும் தான் உண்டு. பெண்களுக்கு மலட்டுத்தன்மை கிடையாது என்றே 18 சித்தர்களும் கூறியுள்ளனர். பெண் ருதுவாகும்போது அந்த கால கட்டத்தில் பெண்ணின் தாய் அல்லது பாட்டி அந்த பெண்ணின் கர்ப்ப பையை பலப்படுத்தும் உணவுப் பொருளை குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்து வருவார்கள்.

இவ்வாறு சத்தான உணவு பொருளை தருவதினால் அந்த பெண்ணின் கர்ப்பபை, முதுகு தண்டு, இடுப்பு பகுதி பலப்படும். இதனால் திருமணத்துக்குப்பின் தாய்மை அடைவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதே போல் பெண் ஜனன ஜாதகம் அல்லது ருது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் நல்ல குழந்தைகள், நல்ல வாழ்க்கை அமையும். ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 6 எனும் சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு கணவன், மனைவி ஒற்றுமை, வீடு, வாகனங்கள், கால்நடைகள், ஜவுளிகள், வாசனை திரவியங்கள், அழகான பெண்களுடன் நட்பு, கப்பல் துறை, இசை மற்றும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், வசதி மற்றும் – ஆடம்பர வாழ்க்கை, வியாபாரத்தில் வெற்றி, கற்பனை திறன், எழுத்தாற்றல், நல்ல பேச்சாற்றல், கலை சார்ந்த துறைகள், அரசியலில் சாதனை புரிவார்கள். 6-ம் தேதியில் பிறந்து படித்து விட்டு வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க பரிகாரம் – வெள்ளி அன்று சுக்கிர ஓரையில் சுக்கிரனை வழிபடலாம்.

அல்லது மகாலட்சுமியை தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடலாம். மாலை வேலையில் 108 மகாலட்சுமி போற்றி சொல்லி மகாலட்சுமியை பூஜிக்கலாம். முன்பெல்லாம் பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்தார்கள். கிணறுகளில் தண்ணீர் இறைத்தார்கள். இது அவர்களது இடுப்பு, முதுகு தண்டு எலும்புகளை பலப்படுத்தியது.

குடத்தின் பாரம் சுமந்ததால் கருவில் இருக்கும் குழந்தையின் சுமை பெண்ணுக்கு பெரிதாக தெரியாது. வீட்டிலேயே பிரசவம் நடக்கும். ஆனால் இன்று யார் இடுப்பில் தண்ணீர் சுமக்கிறார்கள். வீட்டுக்கு வீடு தெருவுக்கு தெரு எல்லாமே குழாய் மயம். உடல் உழைப்பு குறைந்தது. இதனால் பிரசவத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
1b4b65c7 a080 49dd 93e9 c22c92c67c11 S secvpf

Related posts

பெண்கள் பொது இடங்களில் தவிர்க்க வேண்டிய செய்கைகள்

nathan

தங்கமும் அலர்ஜியை உருவாக்கும்

nathan

பிறப்புறுப்பு கருத்தடை ஜெல் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

டாம்பன் உபயோகிக்கலாமா?

nathan

30+ கடந்தவரா நீங்கள்?

nathan

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள்  உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். 

nathan

உயிர் காக்கும் ஃபோலிக் அமிலம்!

nathan

வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை

nathan

கர்ப்ப காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

nathan