தேவையான பொருட்கள்:
* மைதா – 2 கப்
* சர்க்கரை – 1 1/4 கப்
* வெண்ணெய் – 250 கிராம்
* முட்டை – 5
* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
* உப்பு – 1/2 டீஸ்பூன்
* சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
* பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
* கிராம்பு தூள் – 1 சிட்டிகை
* ஜாதிக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
கேராமலுக்கு…
* சர்க்கரை – 1/2 கப்
* தண்ணீர் – 1/4 கப்
ஊற வைப்பதற்கு…
* பேரிச்சம் பழம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த ஆப்ரிகாட் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த கொடிமுந்திரி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* செர்ரி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர் திராட்சை – 1 கப்
* நட்ஸ் – 1 கப் (முந்திரி, பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா பொடியாக நறுக்கியது)
* டார்க் ரம் – 1 கப்
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கேக் செய்வதற்கு முந்தைய தினம் ஒரு பௌலில் நறுக்கிய உலர்பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ரம்மை ஊற்றி நன்கு கலந்து 1 நாள் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு 2 பேக்கிங் பேனை எடுத்து, அதில் பார்ச்மெண்ட் பேப்பரை வைத்து விரித்து, வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சர்க்கரையை உருக்க வேண்டும். சர்க்கரையானது உருகி அடர் நிறத்தில் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மெதுவாக நீரை ஊற்றி சர்க்கரையை நன்கு கரைய வைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், கேராமலை குளிர வைக்க வேண்டும்.
Christmas Special: Rum Fruit Cake Recipe In Tamil
* பின் ஒரு பௌலில் ஊற வைத்த உலர் பழங்களை எடுத்துக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் மைதாவை சேர்த்து கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சல்லடையில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சுக்கு பொடி, பட்டை பொடி, கிராம்பு பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து, எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தி நன்கு க்ரீமியாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் முதலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அடித்துக் கொண்டு, பின் மீதமுள்ள 3 முட்டைகளை உடைத்து ஊற்றி க்ரீமியாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சலித்து வைத்துள்ள பாதி மைதாவை சேர்த்து, பாதி கேரமலை ஊற்றி நன்கு மென்மையாக கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மீதமுள்ள மைதா மாவை சேர்த்து, எஞ்சிய கேரமலை ஊற்றி மீண்டும் நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் உலர்பழங்களின் கலவையை சேர்த்து நன்கு கிளறி, பேக்கிங் பேனில் ஊற்றி பரப்பி, ஓவனில் 40-45 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* கேக் குளிர்ந்ததும், அதை திருப்பிப் போட்டு, பேக்கிங் பேனை அகற்றிவிட்டு, அதில் உள்ள பார்ச்மண்ட் பேப்பரை உரித்து நீக்கிவிட்டு துண்டுகளாக்கினால், சுவையான ரம் ஃபுரூட் கேக் தயார்.