25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mom kids juggling
வீட்டுக்குறிப்புக்கள்

பெண்களுக்கான சில குறிப்புகள்

குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவர். புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பி விட்டால் பளபளப்பு மேலும் கூடும். வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்து விட்டால் புகை உள்ளே பரவாது.

வெண்ணெயில் உப்பைத் தூவிவிட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும். வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள். காய்ந்த பின் அறையில் ஈக்கள்வராது. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.

பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும். பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும். கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவிவிட்டு அப்படியே விட்டு விடவேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும். தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும். வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கரு நீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளேவராது. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெது வெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ்தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும். கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்தபடி வெட்டலாம். மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடைபோய்விடும்.

எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
மழைநீரில் பருப்பு வகைகளை வேகவைத்தால் ஒரு கொதியில் வெந்துவிடும். ருசியும்அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்கவேண்டும். தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
mom kids juggling

Related posts

உங்களுக்காக!!! பயனுள்ள எளிமையான மருத்துவக்குறிப்புகள்…

nathan

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

உண்மைகள்…இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்…!

nathan

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

nathan

நம்ப முடியலையே…”S” என்ற எழுத்தை முதலெழுத்தாக கொண்டவர்களின் தலையெழுத்து இப்படித் தான் இருக்குமாம்..!

nathan

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தென் கிழக்கு திசையில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் பலன்கள்…!

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

nathan