தேவையானப் பொருட்கள் :
சுரைக்காய் – 2
பூண்டு – 4
உப்பு – தேவையான அளவு
துளசி இலை – 2 கப்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
பார்மேசன் சீஸ் – 1/4 கப் (துருவியது)
ஸ்பெகட்டி பாஸ்தா – ஒரு கப்
கருப்பு மிளகுத் தூள் – சுவைக்கு ஏற்ப
செர்ரி தக்காளி – 5 முதல் 6
சாஸ் செய்முறை :
துளசி இலைகள் மற்றும் பூண்டு சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது ஆலிவ் ஆயிலை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவேண்டும்.
சாஸ் செய்முறை :
பின்னர், பார்மேசன் சீஸ் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால் சுவையான வீட்டில் செய்த பாஸ்தா சாஸ் தயார்.
சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :
ஸ்பெகட்டி பாஸ்தாவை தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில், உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும்.
சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :
சுரைக்காயை நீரில் போட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஈரப்பதம் முழுவதுமாக நீங்கும படி ஒரு மெல்லிய துணியின் மீது வைத்து ஈரப்பதத்தை நீக்க வேண்டும்.
சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :
வதக்கி வைத்திருக்கும் மசாலாவுடன் வேக வைத்த சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர், செய்து வைத்திருக்கும் பாஸ்தா சாஸை சேர்த்து கலக்க வேண்டும்.
சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :
நன்கு கலக்கிப் பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பவுலில் செய்து வைத்திருக்கும் பாஸ்தாவை மாற்றி வைக்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் பாஸ்தா பரிமாற ரெடி.