உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.
மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.
ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
* டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.
* எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.
* டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் தொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.
* சிலர் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.
* சேவா- பூந்தியும் உடலுக்கு கேடு தான். அளவாக இருக்கும் வரை அனைத்தும் அமிர்தம் தான் அளவை மீறும் போது தான் பிரச்சனை உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
* பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.
இந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.