28.6 C
Chennai
Saturday, Jun 22, 2024
22 1350902030 curd
ஆரோக்கிய உணவு

தயிர்

• தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.

• உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்.) அது வயிற்றில் வேகமாகத் புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகிவற்றிற்கு வழி வகுக்கும்.

• மண் சட்டியிலிருந்து புரை குத்திய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.

• ஒருபோதும் தயிரை சுட வைத்துச் சாப்பிடக்கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்புச் சேர்த்துச் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல.

• உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

• தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் கிளாஸ் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.

• தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

• பசியில்லாதவர்கள் புளிப்பு தலை காட்டத் தொடங்கிய தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.

• நன்றாக புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

• இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஜீரணக் குறைவு ஏற்படும். அதனால்தான் தயிரை இரவில் உண்ணக்கூடாது என்கிறார்கள்.

• இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, காமாலை, தோல் நோய்,ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகும்.

• இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.
22 1350902030 curd

Related posts

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

சூப்பர் டிப்ஸ்!வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!!

nathan

சுவையான ஸ்பெஷல்: பாசுந்தி

nathan

பாகற்காய்னு சொன்னாலே வாய் கசக்குதா?… அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

தெரிஞ்சிக்கங்க… சப்ஜா விதைகள் எடுத்து கொள்வதனால் இத்தனை பயனா?

nathan

சூப்பரான சுண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

துத்திக் கீரை சூப்

nathan