தேவையான பொருட்கள்:
* சாதம் – 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு – 1
* புதினா இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* பிரட் தூள் – 2 டீஸ்பூன்
* சீஸ் துண்டுகள் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
கோட்டிங்கிற்கு…
* மைதா – 3 டீஸ்பூன்
* பிரட் தூள் – 4-5 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சாதம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், பிரட் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு சீஸ் துண்டுகளை 4 நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து, அதை உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டி, அதன் நடுவே ஒரு துண்டு சீஸ் வைத்து, மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* அதற்குள் மைதாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை மைதா நீரில் பிரட்டி, பின் அதை பிரட் தூளில் ஒருமுறை பிரட்டி, பின்பு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சீஸி ரைஸ் பாப்பர்ஸ் தயார்.