25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
14 1455442597 25 1453718477 otherfactors1
மருத்துவ குறிப்பு

கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?

கார்சினோஜென்கள் என்பது புற்றுநோய்களை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும். கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கார்சினோஜென்கள் பல்வேறு வழிகளில் செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்குகிறது. சில, மிகவும் வலுவுள்ளதாக இருப்பதால் டி.என்.ஏ. அமைப்புகள் மீது நேரடியாக செயல்பட்டு, பிறழ்வை உண்டாக்கும். அதிகரிக்கும் அணுக்கள் பிரிவு அல்லது செல்லுலார் வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் போன்ற மறைமுக வழிகளில் சில கார்சினோஜென்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புற்றுநோயை தடுக்கவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும், கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய முழுமையான அறிவு இருப்பது அவசியமாகும். பொதுவாக நாம் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது கதிர்வீச்சுக்களை தான் புற்றுநோய் ஏற்படுத்தவதற்கான மூல காரணங்களாக பார்ப்போம். இருப்பினும், இதையும் மீறிய பல காரணங்களாலும் கூட புற்றுநோய் ஏற்படுகிறது என்பது தான் உண்மை. ஆஸ்பெர்ஜிலஸ் ஃப்ளேவஸ், புகையிலை, கல்நார், வினைல் குளோரைடு போன்றவைகளால் ஏற்படும் கறைகளால் உண்டாகும் வைரல் தொற்றுக்கள், பூஞ்சை தொற்றுக்களும் இதற்கு காரணமாகும்.

சிக்கலான அமைப்புகளையும், இயந்திர நுட்பங்களையும் நாம் கொண்டிருந்த போதும் கூட கார்சினோஜென்கள் ஏன் புற்றுநோயை உண்டாக்குகிறது. நேரடி கார்சினோஜென்கள் போக, கோ-கார்சினோஜென்கள் எனப்படும் சில ரசாயனங்கள் நேரடியாக புற்றுநோயை உண்டாக்கவிட்டாலும் கூட, கார்சினோஜென்களின் செயல்களை மேம்படுத்தும் விதமாக அவைகள் செயல்படும். கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இதனைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிறழ்வு

ஜினோடாக்சின்கள் வகையின் கீழ் வரும் கார்சினோஜென்கள் பிறழ்வை ஏற்படுத்தும். இவைகள் டி.என்.ஏ. அமைப்புகளுக்கு, மாற்றமுடியாத அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். புறஊதா கதிர்கள் மற்றும் அயனாக்காத கதிரியக்கம் போன்ற ரசாயனம் அற்ற முகவர்கள் அல்லது என்-நைட்ரோ-என்-மேத்திலூரியா (என்.எம்.யு) ஆகியவைகள் இதற்கான சில முக்கிய உதாரணங்கள் ஆகும். இதுப்போக, சில வைரஸ்களும் கூட மரபணு பிறழ்வுகளை ஏற்படுத்தும்.

அணுக்கள் பழுது பார்த்தலில் குறைபாடு

மிகவும் திறமையான பழுது பார்த்தல் அமைவுமுறை இருப்பதால் தான் நம் அணுக்கள் ஒழுங்காக செயல்படுகிறது. அணுக்கள் பிரிவின் போது எந்த ஒரு பிழையையும் இது நிவர்த்தி செய்து விடும். திறமையான டி.என்.ஏ. பழுது பார்த்தல் அமைவுமுறை இருந்த போதும் கூட கார்சினோஜென்கள் ஏன் புற்றுநோயை உண்டாக்குகிறது? இந்த பழுது பார்த்தல் அமைமுறையில் ஏற்படும் எந்த ஒரு பிழையும் டி.என்.ஏ. குறைபாட்டை ஏற்படுத்தும். அதனால் அணுக்கள் வளர்ச்சி அசாதாரண மற்றும் கட்டுப்பாடற்ற முறையில் இருக்கும். இது புற்றுநோயை ஏற்படுத்தும்.

அணுக்கள் பிரிவைத் துரிதப்படுத்தல்

சில கார்சினோஜென்கள் அணுக்கள் பிரிவு வீதத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படும். இதனால் டி.என்.ஏ. அமைப்பில் பிழைகள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அதனால், கார்சினோஜென்களுக்கு ஒருவரின் உடல் எப்படி எதிர் செயலாற்றுகிறது என்பதை பொறுத்து, புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு ஒவ்வொரு நபருக்கும் இடையே மாறுபடும்.

சமநிலையற்ற அணு வளர்ச்சி மற்றும் அணு இறப்பு

அணுக்களின் வளர்ச்சிக்கும் இறப்புக்கும் இடையே இயற்கையான சமநிலை உள்ளது. ஆனால் கார்சினோஜென்களின் செயல்களால், இயற்கையான வழிமுறையில் நடைபெறும் அணுக்களின் இறப்பில் மாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழல்களில், அணுக்கள் இறப்பு செயல்பாட்டின் வேகம் குறையும். இதனால் அணுக்கள் பிரிவது தொடரும். இந்த அசாதாரண விகிதம் நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும்.

மரபு வழி

ஒரு நபருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு அவரின் மரபு வழியும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபரின் குடும்ப வரலாற்றில் ஏதேனும் வகை புற்றுநோயால் சிலர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். வெளிப்புற கார்சினோஜெனிக் காரணிகளாலும் கூட புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு அதிகரிக்கும்.

பிற காரணிகள்

கார்சினோஜென்கள் ஏன் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை தீர்மானிக்க பிற காரணிகளும் உள்ளது. ஒரு நபரின் வயது மற்றும் பாலினம், கார்சினோஜென்களில் வெளிப்படும் காலம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களின் ஆற்றல் ஆகியவைகள் இதற்கு சில உதாரணங்கள்.

14 1455442597 25 1453718477 otherfactors1

Related posts

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் அவசியம்

nathan

லவங்கபட்டையின் மருத்துவ பயன்கள்! மூலிகை மந்திரம்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

nathan

இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கோபம்

nathan

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றிய 10 ஆச்சரியமான விஷயங்கள்!!

nathan

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!இத படிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து…..!

nathan

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடி மரணமா?

nathan