36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும்

எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து

வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.

• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது

நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.

• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால்,

மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

• மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு

உடனே நீங்கும்.

• சுக்கை ஒரு கப் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து,

பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.

• விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.

• வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு போய்விடும்.

• ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு உடனே விலகும்.

• வெங்காயத்தை தோலுரித்து வெட்டி, அதனை 4-5 நிமிடம் முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபடலாம்.

Related posts

தேங்காய்ப் பாலின் மகத்துவம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan

உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்பட இதெல்லாம் கூட காரணமாக இருக்கின்றன!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை இயற்கையான முறையில் தடுக்க சில வழிகள்!!!

nathan