தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் – 1 1/2 கப் (நறுக்கியது)
* துருவிய தேங்காய் – 1/4 கப்
வறுத்து அரைப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* பூண்டு – 2 பல்
* புளி – 1 துண்டு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் பீட்ரூட்டை சேர்த்து, சிறிது உப்பு தூவி 3-5 நிமிடம் வதக்கி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் அதில் தேங்காய் மற்றும் பிற வறுத்த பொருட்களையும் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
Beetroot Chutney Recipe In Tamil
* வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்கு கிளறினால், பீட்ரூட் சட்னி தயார்.