25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
eral
அசைவ வகைகள்

இறால் மசால்

தேவையான பொருட்கள்:

இறால் – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – ஒன்று (பெரியது)

பூண்டு – 7 பல்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப
அரைக்க:-

தேங்காய்துருவல் – 3/4 கப்

காய்ந்த மிளகாய் – 8 எண்ணம் அல்லது 1 1/2 – 2 டீஸ்பூன்(காரத்திற்கு ஏற்ப)

நல்ல மிளகு – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கசகசா – 3/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

சீரகம் – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய வட்டங்களாக நறுக்கி கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும், பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்துருவல், காய்ந்தமிளகாய், சோம்பு, நல்லமிளகு, கசகசா ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் தாளிக்க வேண்டியவற்றை கறிவேப்பில்லை, சீரகம், வெந்தயம், சோம்பு இவற்றை தாளிக்கவும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்த்தூள் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

சிறிது நேரத்தில் இறாலைப் போட்டு வதக்கவும், 5 நிமிடம் கழித்து அரைத்த விழுதினை போட்டு நன்றாக கிளறி விடவும்.

எல்லாமும் கலந்து இருக்கும்மாறு தேவையான உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிப்போட்டு வேகவைக்கவும். மிதமான தீயில் தண்ணீர் வற்றி கெட்டியாகும் நேரம் இறக்கவும். இப்போது இறால் மசா
eral

Related posts

இறால் பஜ்ஜி

nathan

இறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை!!!

nathan

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

சூப்பரான பேசில் தாய் சிக்கன்

nathan

மட்டன் மிளகு கறி

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan