28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
2224e765 7add 416f ba41 73aa9cb0c92c S secvpf
சைவம்

கறிவேப்பிலை மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு,
மிளகு – 20,
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

* கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து. புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்கயில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

குறிப்பு: இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். இந்த குழம்பு செய்ய நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும்.

2224e765 7add 416f ba41 73aa9cb0c92c S secvpf

Related posts

தனியா பொடி சாதம்

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான வேர்க்கடலை குழம்பு

nathan

சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

தயிர் சாதம் பிராமண சமையல்

nathan

பேபி கார்ன் மசாலா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

nathan

சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி

nathan

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

nathan