25 1372150644 3 flu
மருத்துவ குறிப்பு

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

இது குளிர் காலம் என்பதால் பலருக்கும் சளித்தொல்லை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை செய்து வைத்து கொள்ளலாம். இதை தினமும் சமைக்கும் போது பயன்படுத்தலாம். இந்த பொடி ஜீரணசக்தி, சளித்தொல்லை, தலைவலி, இருமல் , உடல்வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இந்த பொடி செய்ய தேவையான பொருட்கள்:

சுக்கு – ஒரு சிறிய துண்டு,
சுண்டைக்காய் வற்றல் – 10,
வேப்பம்பூ, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி,
மிளகு – 2 டீஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

செய்முறை: இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்.25 1372150644 3 flu

Related posts

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

இயற்கையை காப்பாற்ற உங்களால் முடிந்த இந்த செயல்களை பின்பற்றலாமே!!!!

nathan

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்!

nathan

தெரிஞ்சிக்கங்க… தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்…

nathan

மனித உடலின் அற்புதங்களை தெரிந்து கொள்ளலாம்

nathan