31.1 C
Chennai
Wednesday, Jun 26, 2024
08 1454926266 7 sleep3
கர்ப்பிணி பெண்களுக்கு

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!

குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும். ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது. அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணீர் வராது

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது. மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும். வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது!

தன் தாயை நன்கு தெரியும

் பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

கண் பார்வை இன்னும் வளரும்

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும். சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

மனித முகம் காண பிடிக்கும்

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை தான் பிடிக்கும

் மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனை விட அதிகமான எலும்புகள்

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும். அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

சருமத்தில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும்

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும். இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்.
08 1454926266 7 sleep3

Related posts

பிரசவத்திற்கு பின் வந்துவிட்டதா ஸ்ட்ரெச் மார்க்? கவலை வேண்டாம்..இதயெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

தைராய்டு இருக்கும் கர்ப்பிணியா நீங்கள்? கட்டாயம் இத படிங்க…

nathan

தளும்புகள் ஏற்பட்டு விட்டால் இதை செய்யுங்கள்…

sangika

எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா?

nathan

நீங்கள் வேலைக்கு செல்லும் கர்ப்பிணியா இதோ உங்களுக்கான டிப்ஸ்?

nathan

எச்சரிக்கை! கர்ப்பிணிகளே இந்த விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள்!

nathan

கர்ப்ப காலமும் உடல்பருமனும்

nathan

தண்ணீரில் விரைவாக பிரசவம்

nathan

தாய் பாலுக்கு இணையான கழுதை பால் – ஆரோக்கிய நன்மைகள்!

nathan