29.5 C
Chennai
Monday, Apr 28, 2025
a0aa754a 595a 4ed5 85df 3c1b3074b720 S secvpf
கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

 

மசாஜ் செய்வதால் உங்கள் குழந்தைக்கு கூடுதலாக பல பயன்களும் கிடைக்கக்கூடும். உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளர்வதால் ஏற்படும் வலியை சுலபப்படுத்துதல் போன்ற பயன்களை அளிக்கும்.

மசாஜ் தொடங்கும் முறை

• இன்னும் தவழாத குழந்தைகளுக்கு இந்த செயல்முறைகள் சரியானதாக இருக்கும். வெற்றிகரமாக மசாஜ் செய்ய வேண்டுமானால், உணவு உண்ணுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ அல்லது தூங்க போகும் போதோ மசாஜ் செய்யாதீர்கள். உங்கள் குழந்தை தயார் நிலையில் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உடனே தரையில் ஒரு துண்டை விரித்துக் கொள்ளுங்கள். அருகில் சின்ன கிண்ணத்தில் காய்கறி சம்பந்தப்பட்ட எண்ணெய்யை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். மசாஜை முடிப்பதற்கு முன்பாகவே உங்கள் குழந்தைக்கு தோது இல்லாமல் அழத் தொடங்கினால், மசாஜை நிறுத்தி விட்டு அதனை செல்லமாக அரவணைத்து கொள்ளுங்கள்.

• கால்கள் தான் மசாஜை தொடங்க சிறந்த இடம். அதற்கு காரணம் உடலின் மற்ற அங்கங்களுடன் ஒப்பிடுகையில் கால்களில் தான் உணர்ச்சி சற்று குறைவாக இருக்கும். சிறிது எண்ணெய்யை எடுத்துக் கொண்டு, உங்கள் கைகளை அதன் ஒரு தொடையில் வைத்து, அங்கிருந்து அப்படியே கீழே வரைக்கும் நீவி விடுங்கள். இப்படியே ஒரு கை மாறி மற்றொரு கையை கொண்டு தொடர்ந்து நீவி விடவும். பின் அடுத்த காலுக்கும் இதையே தொடரவும்.

• ஒரு பாதத்தை எடுத்துக் கொண்டு சில நிமிடங்களுக்கு, ஒவ்வொரு திசையிலும் அதனை மென்மையாக சுழற்றவும். பின் கணுக்காலில் இருந்து பாதம் வரை மெதுவாக நீவி விடுங்கள். பின் அடுத்த பாதத்தை எடுத்து இதை தொடருங்கள்.

• கால் விரல்கள் பாதத்தில் மசாஜ் முழுமை பெற வேண்டுமானால், ஒவ்வொரு கால் விரலையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் எடுத்து, மெதுவாக சொடுக்கு எடுக்கவும். இதனை பத்து விரல்களுக்கும் தொடரவும்.

• உங்கள் கைகளால் குழந்தையின் ஒரு கையை தூக்கி, அதன் அக்குளில் இருந்து மணிக்கட்டு வரை, பால் கறக்கும் முறையில் மசாஜ் செய்யுங்கள். பின் கையின் மணிக்கட்டை அனைத்து திசையிலும் சில முறை மெதுவாக திருப்பவும். பின் அடுத்த கைக்கு இதையே தொடருங்கள்.

• உள்ளங்கையில் உள்ள சிறிய வட்டங்களை கண்டுபிடித்து, அங்கே உங்கள் பெருவிரலால் சுழற்சி முறையில் மசாஜ் செய்யுங்கள்.

• விரல்கள் ஒவ்வொன்றையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் எடுத்து, மெதுவாக சொடுக்கு எடுத்து விடவும். இதனை 10 விரல்களுக்கும் செய்திடுங்கள்.

• நெஞ்சு வணங்கும் முறையில் கைகளை குழந்தையின் நெஞ்சின் மீது வையுங்கள். பின் கைகளை மெதுவாக திறந்து, அப்படியே நெஞ்சு முழுவதும் நீவி விடுங்கள். இதை செய்யும் போது உங்கள் கைகள் தட்டையாக அவர்கள் நெஞ்சின் மீது இருக்க வேண்டும். இதனை பல முறை செய்யவும். நெஞ்சின் மேல் ஒரு கையை தட்டையாக வைத்துக் கொள்ளுங்கள். பின் தொடை வரைக்கும் அப்படியே மெதுவாக நீவி விடுங்கள். இரண்டு கைகளிலும் மாறி மாறி இதனை பல முறை தொடர்ந்து செய்யுங்கள்.

• பின்பக்கம் குழந்தையை குப்புற படுக்க வையுங்கள். உங்கள் விரல் நுனிகளை கொண்டு, குழந்தையின் இருபக்க முதுகெலும்பின் ஆரம்பித்தில் இருந்து கீழே வரை சிறிய வட்டங்களை கண்டுபிடித்து, மெல்ல நீவி விடுங்கள். தோளில் இருந்து பாதம் அவரை திடமாக நீவி விடுங்கள். முடிந்த பிறகு, குழந்தைக்கு ஜட்டியை போட்டு விட்டு, அதனை அரவணைத்து கொள்ளுங்கள். பின் தாய்ப்பால் கொடுங்கள். உடனே தூங்கி விடுவார்கள்

a0aa754a 595a 4ed5 85df 3c1b3074b720 S secvpf

Related posts

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்

nathan

கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேனிங்

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

nathan

கர்ப்ப காலத்தில் புளிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

கர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா?

nathan

தாய்மார்கள் குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

nathan

கர்ப்ப கால 10 நம்பிக்கைகள்

nathan

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan