goan pork vindaloo
அசைவ வகைகள்

கோவா பன்றிக்கறி விண்டலூ

தேவையான பொருள்கள்

பன்றிக்கறி – 1 கிலோ
விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது)
இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை – 1 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 6
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி (அல்லது சமைக்க தாவர எண்ணெய்)
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப

** விண்டலூ மசாலா செய்ய-

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம் – 2 (வெட்டியது)
பெரிய தக்காளி – 3 (நறுக்கிக்கொண்டது)
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கருமிளகு – 7
வெள்ளை வினிகர்

செய்முறை: வினிகர் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, அவ்வப்போது வினிகர் சிறிதளவு விட்டு கெட்டியான விழுதாக ஆகும் வரைக்கும் அரைத்துக்கொள்ளுங்கள். விண்டலூ விழுது ரெடி.

இது பன்றிக்கறி விண்டலூ செய்வதற்கு உபயோகப்படுத்திகொண்டாலும், இதே செய்முறையில் கோழிக்கறி விண்டலூ செய்யவும் சுவையானதாக இருக்கும்.

செய்முறை

பன்றிக்கறியை கொழுப்பு நீக்கிவிட்டு, விரலளவு சதுரங்களாக வெட்டிகொள்ளவும்.
வெட்டிய கறியை விண்டலூ மசாலாவுடன் கலந்து 24 மணிநேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் இஞ்சி விழுது, பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்னர் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
இதன் மீது கறியை மட்டும் சேர்க்கவும். கூடவே நீராக இருக்கும் மசாலாவை இப்போது சேர்க்கவேண்டாம்.
கறி நன்கு பழுப்பாக ஆகும்வரைக்கும் வதக்கியபின்னர், இப்போது மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.
மேலும் ஒரு கோப்பை தண்ணீரும் ருசிக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
குறைந்த தீயில் கறி மிருதுவாக ஆகும்வரை வேகவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
goan pork vindaloo
===

Related posts

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

nathan

புத்தாண்டு ஸ்பெஷல்: செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்

nathan

செட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது) !

nathan

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி

nathan

முட்டை சாட்

nathan

சூப்பர்” இறால் ப்ரை”

nathan