24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
5bb20528 a6f1 4caf 9af1 e17ec7b3dab0 S secvpf
சிற்றுண்டி வகைகள்

அவல் வெஜ் புலாவ்

தேவையான பொருட்கள்:

நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு – அரை கப், வெங்காயம் – 1
கெட்டி அவல் – 2 கப்,
தக்காளி – 2,
தேங்காய் பால் – அரை கப்,
கரம்மலாசா தூள் – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித்தழை,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• தக்காளியை அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

• காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

• வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

5bb20528 a6f1 4caf 9af1 e17ec7b3dab0 S secvpf

Related posts

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

nathan

காராமணி தட்டை கொழுக்கட்டை

nathan

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

பேபி கார்ன் புலாவ்

nathan

பால் அப்பம் செய்முறை விளக்கம்

nathan

காளான் கபாப்

nathan

மீல் மேக்கர் கட்லெட்

nathan