29 C
Chennai
Wednesday, Jun 26, 2024
ice ahmal161109
ஐஸ்க்ரீம் வகைகள்

மாம்பழ குச்சி ஐஸ்

என்னென்ன தேவை?

பால் – அரை லிட்டர்,
அரிசி மாவு – 2 டீ ஸ்பூன்,
சீனி – 100 கிராம்,
பாதாம் – சிறிது
முந்திரி – சிறிது
மாம்பழம் – 1
எப்படி செய்வது?

பாலை நன்கு வற்ற காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும்.

இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம். மாம்பழ குல்பி உறைந்ததும் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!

ice ahmal161109

Related posts

மேங்கோ குல்ஃபி

nathan

பட்டர் புட்டிங்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

மால்ட் புட்டிங்

nathan

கேசர் பிஸ்தா குல்பி

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

குல்பி

nathan

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan