27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
peppermuttonvaruval
அசைவ வகைகள்

பெப்பர் மட்டன் வறுவல்

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

* பட்டை – 1 துண்டு

* சோம்பு – 1 டீஸ்பூன்

* ஏலக்காய் – 4

* கிராம்பு – 4

* பிரியாணி இலை – 1

* வெங்காயம் – 3 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 4

* தக்காளி – 2 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* மட்டன் – 1 கிலோ

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 15

* கறிவேப்பிலை – ஒரு கையளவு

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

* பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

* பின்பு அதில் மட்டனைக் கழுவி போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு பத்து நிமிடம் வதக்கவும்.

* அடுத்து தக்காளியைப் போட்டு ஒருமுறை கிளறி, மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கிளறி, பச்சை மிளகாயைப் போட்டு, நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* விசில் போனாலும், குக்கரைத் திறந்து, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து, பத்து நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

* அதற்குள் மற்றொரு வாணலியில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து, பொடி செய்து கொள்ளுங்கள்.

* சின்ன வெங்காயம் வெந்த பின், அரைத்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியை மட்டனுடன் சேர்த்து தூவி கிளறி இறக்கினால், காரமான பெப்பர் மட்டன் வறுவல் தயார்.

Related posts

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan