29.2 C
Chennai
Tuesday, Feb 18, 2025
mealmaker kurma
சமையல் குறிப்புகள்

சுவையான மீல் மேக்கர் குருமா

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் – 1 கப்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீபூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீபூன்

* மல்லித் தூள் – 2 டீபூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீபூன்

* கரம் மசாலா – 1/4 டீபூன்

* சோம்பு – 1/2 டீபூன்

* கிராம்பு – 4

* பட்டை – 1 இன்ச்

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

* பட்டை – 1 இன்ச்

* சீரகம் – 1/2 டீபூன்

* சோம்பு – 1/2 டீபூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் பூன்

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை நன்கு அலசி, அதிகப்படியான நீரை கையால் பிழிந்து, மீல் மேக்கரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, துருவிய தேங்காயை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி இறக்கி, குளிர வைக்கவும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் குருமா தயார்.

Related posts

சூப்பரான தேங்காய் பொடி சாதம்

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan

எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?தெரிந்துகொள்வோமா?

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? ஆஹா பிரமாதம்

nathan

சுவையான காளான் பொரியல்

nathan

மாம்பழ பூரி

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan