25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2fb9d226 6a2b 4ca4 921e 97663bf4675c S secvpf1
சிற்றுண்டி வகைகள்

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சுறா புட்டு

தேவையான பொருட்கள் :

சுறா மீன் – 250 கிராம்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

புட்டு செய்வதற்கு :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டவும்.

* மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* எண்ணெய் போதவில்லையெனில், சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு, பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட வேண்டும்.

* மீன் நன்றாக உதிரியாக வரும் போது இறக்கினால், சுறா புட்டு ரெடி.

2fb9d226 6a2b 4ca4 921e 97663bf4675c S secvpf

Related posts

கருப்பட்டி இட்லி

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

தாளித்த கொழுக்கட்டை

nathan

பூசணி உலர் திராட்சை ரெய்தா

nathan

சத்தான அவல் கிச்சடி செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

nathan