24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
chettinadpoondurasamrecipeintami
செட்டிநாட்டுச் சமையல்

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 1/4 கப்

* புளி – 20 கிராம் (1 கப் சுடுநீரில் ஊற வைக்கவும்)

* தக்காளி – 3 (நறுக்கி அரைத்தது)

* நெய் – 1 டேபிள் பூன்

* கடுகு – 1/2 டீபூன்

* சீரகம் – 1/2 டீபூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீபூன்

* பூண்டு – 6 பல்

* கறிவேப்பிலை – சிறிது

* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்

* மிளகுத் தூள் – 1/2 டீபூன்

* சீரகப் பொடி – 1/2 டீபூன்

* மல்லித் தூள் – 1-1/2 டீபூன்

* மிளகாய் தூள் – 1 டீபூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீபூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

* பின் ஊற வைத்துள்ள புளியை கையால் பிசைந்து, ஒரு கப் அளவில் புளி நீர் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

* பின் அரைத்த தகிகாளி, புளி நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் நுரைக்கட்டும் வரை சூடேற்றவும்.

* ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான செட்டிநாடு பூண்டு ரசம் தயார்.

Related posts

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

வட இந்திய ஸ்டைலில் காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

ருசியான… செட்டிநாடு சுழியம்

nathan

வெந்தய கார குழம்பு

nathan

சுவையான காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு

nathan

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan