27 C
Chennai
Wednesday, Nov 20, 2024
07c2ab64 e70a 4b50 ac02 214123b3effc S secvpf1
ஆரோக்கிய உணவு

உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் உணவுகள்

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். சில உணவுகள் உங்கள் உடல் எடையை குறைய விடாமல் தடுக்கும் தன்மை கொண்டவை. உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம்.

சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். பால் பொருட்களுக்கு அழற்சி ஏற்படுவதற்கு அதில் உள்ள ஒவ்வாமை ஊக்கிகள் தான் காரணம். இதன் காரணமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சரும அரிப்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றம் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

எனவே பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும். ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்களானது எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி உணவுகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும். உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் உடல் பருமன் போன்றவை ஏற்படும்.

என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில்(மைதா) எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அதுமட்டுமின்றி, இவை உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.
07c2ab64 e70a 4b50 ac02 214123b3effc S secvpf

Related posts

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடை குறையணுமா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

மீன் உணவு… இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்!

nathan

கோடைக்காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

nathan

சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

nathan

மருத்துவ குறிப்புகள்

nathan