28.9 C
Chennai
Saturday, Aug 16, 2025
pre 1538737661 1
மருத்துவ குறிப்பு

கர்ப்பம் தரித்து இருப்பதை அறிந்து கொள்ள உதவும் வழிமுறைகள்

கர்ப்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒற்றுமையின் அதிசயம். இதனால், ஒரு பெண் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் கர்ப்பம் ஏற்பட்டதை அறிந்து, இதை அறிந்த பிறகுதான், கணவரிடம் கூறுகிறார். கணவன் மனைவி கர்ப்பமாக

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது எப்படித் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும்,  தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நீங்கள் படிக்கலாம்.

மாதவிடாய் சுழற்சி!
பல பெண்கள் தங்களின் மாதவிடாய் நாட்களை சரியாக நினைவில் கொள்ள மாட்டார்கள்; வந்தால் அதற்கான நடவடிக்கைளை செய்வார்களே தவிர, பல பெண்கள் மாதவிடாயை பெரிதாக எதிர்பார்த்து செயல்படுவது இல்லை.

ஆனால், திருமணமாகி உறவு கொண்டு வாழ்க்கையும் தாம்பத்யமும் சரியாக நடக்க ஆரம்பித்த பின், மனைவியின் மாதவிடாய் சுழற்சியை கணவன்மார்கள் கூர்ந்து கவனித்து வர வேண்டும்; அப்படி கவனித்து வந்தால், மனைவிக்கு நாள் தள்ளிப்போவதை வைத்து கர்ப்பம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மார்பு அளவு!

கர்ப்பம் நிகழப்போவதை அல்லது நிகழ்ந்து விட்டதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும்; அதில் முக்கியமான ஒரு மாற்றம் தான் பெண்களின் மார்பகம் பெரிதாகல்! கணவன்மார்கள் மனைவியின் மார்பு அளவை நன்கு கவனித்து வந்து இருந்தால், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே மனைவி கர்ப்பம் அடைந்திருக்கிறாளா இல்லையா என்று கண்டு கொள்ளலாம்.!

சோர்வும் திணறலும்!

பெண்கள் கருத்தரிக்கும் நிலையில் இருந்தால், அவர்களுக்கு அதிகம் மூச்சுத்திணறல் மற்றும் பலவீனம், சோர்வு போன்றவை ஏற்படும். மனைவி வழக்கத்திற்கு மாறாக சோர்ந்து இருந்தால், மேற்கூறிய மாற்றங்களையும் கணவன்மார்கள் கவனித்து இருந்தால், எல்லாம் எண்ணிய வண்ணம் ஒத்துப்போனால் கண்டிப்பாக மனைவி கர்ப்பம் தரித்து இருக்கிறாள் என்று அர்த்தம். மனைவியின் கர்ப்பத்தை கணவன்மார்கள் எளிதில் உறுதி செய்து விடலாம்.

வலிகள் ஆயிரம்!

கர்ப்பம் ஏற்படும் முன் அல்லது ஏற்பட்ட பின் பெண்களின் உடலில் பல வலிகள் ஏற்படும். ஆகையால், உங்கள் மனைவிக்கு அடிக்கடி தலை வலி மற்றும் முதுகுவலி ஏற்பட்டால், அதனால் மனைவி அதிகம் சோர்ந்து போனால் கண்டிப்பாக அது கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் கணவன்மார்களே! மனைவி அடையும் வலிகள் உங்களுக்கு அவளின் கர்ப்ப நிலையை எடுத்து காட்டும்.!

 

பழக்கம் மாறுபடும்!

பெண்கள் கர்ப்பம் தரித்து இருந்தால் வழக்கத்திற்கு மாறாக அதிகம் உணவு உண்பார்கள்; நீர் பருகுவார்கள்; சிறுநீர் கழிப்பார்கள். உங்கள் மனைவியும் தனது வழக்கத்திற்கு மாறாக இது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டால் அவர்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறார் என்று பொருள். மனைவியின் பழக்க வழக்கங்களை நன்கு கவனித்து வந்தால், கணவன்மார்களால் ஈசியாக மனைவியின் கர்ப்பத்தை பற்றி அறிய முடியும்.

வாசனைகள் காட்டி கொடுக்கும்!

மனைவிக்கு வழக்கத்திற்கு மாறாக பழகிய வாசனைகள், பொருட்களின் மணங்கள் ஒத்து போகாமல் வாந்தி, குமட்டல், தலை சுற்றல் போன்றவை ஏற்பட்டால் அது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, கணவன்மார்கள் மனைவி வெளிக்காட்டும் இந்த அறிகுறிகளின் மூலம் கூட அவர்களின் உடல் நிலையை அறிய முடியும்.

 

மனைவியின் மனநிலை!

மனைவியின் மனநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறிக்கொண்டு இருந்தால், அவளின் உடலில் உங்களால் உருவான உயிர் வளர்கிறது என்று அர்த்தம். பொதுவாக இருக்கும் நிலைக்கு மாறாக பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் மற்றும் மனநிலைகளில் அதிகமான மாறுபாடுகள் தோன்றினால் அது கட்டாயம் கர்ப்பத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்!

மருத்துவ சோதனை!

இந்த அறிகுறிகள் பல உங்கள் துணைவியின் உடலில் தென்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து, கர்ப்பமா இல்லையா என்பதை அறிந்து, மருத்துவர் தரும் சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பாருங்கள்! கர்ப்பம் என்று தெரிந்தால் வரவிருக்கும் குழந்தையை வரவேற்று வளர்க்க தயாராகுங்கள்; கர்ப்பம் இல்லை என்றால், கர்ப்பம் உண்டாவதற்கான வழிகளை கடைபிடிக்க தொடங்குங்கள்!

Related posts

குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

nathan

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan

கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைவலியின் வகைகள்

nathan

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

nathan

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

nathan