28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
cover 1568454850
ஆரோக்கிய உணவு

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த சிகிச்சை

கர்ப்பிணிப் பெண்கள் எந்த உணவுகளைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் குழப்பம் அடைகிறார்கள். அவற்றில் ஒன்று ஆப்பிள் சைடர் வினிகர். கர்ப்பமாக இருக்கும் போது ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்ள ஆர்வமா?

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆப்பிள் சைடர் வினிகர் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆப்பிள் சீடர் வினிகரை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள்களை நசுக்கிப் பிசைந்து வடிகட்டி எடுக்கப்படும் ஒன்றாகும். இவற்றைச் சற்று புளிக்க வைத்து பின்பு எடுக்கும் போது அசிட்டிக் அமிலமாக மாறும். பின்பு சிறிது காற்றோட்டத்திற்குப் பிறகு விற்பனை செய்யப்படும். மேலும் சில தயாரிப்புகளில் பேஸ்டுரைஸ் சேர்க்கப்படுகிறது. இந்த பேஸ்டுரைஸ்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட வினிகரை எடுத்துக் கொள்ளுவதே சிறந்தது. சில சுத்தம் செய்யப்படாத வினிகரும் சந்தைகளில் விற்கப்படுகிறது. எனவே வினிகர் வாங்கும் போது சரி பார்த்து வாங்குங்கள்.

 

அதிகாலை மயக்கம்

கர்ப்பிணிப் பெண்களின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் காலை வியாதி அதாவது வாந்தி மயக்கம் மற்றும் தலைச் சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவும்

நல்ல பானம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு நல்ல ஆரோக்கிய பானமாக இருக்கும். இவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நடுநிலையில் வைக்க உதவுகிறது. எனவே ஆப்பிள் சீடர் வினிகரை கர்ப்பிணிப் பெண்கள் தாராளமாகப் பருகலாம்.

நோய்த்தொற்று தடுத்தல்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவது பொதுவான விஷயம் தான். ஆப்பிள் சைடர் வினிகரில் என்சைம்கள் மற்றும் பல பயனுள்ள தாதுகள் அடங்கியுள்ளன. இவை நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைத் தடுக்கின்றன. அப்படி கர்ப்பிணிப் பெண்கள் யாராவது யுடிஐ அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கி தினமும் இரண்டு முறை பருகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நெஞ்சு எரிச்சல்

கர்ப்பிணிப் பெண்களின் முதல் மூன்று மாதங்கள் அல்லது இரண்டாவது மூன்று மாதங்களில் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படும். ஏனென்றால் கருவில் இருக்கும் குழந்தை தாயின் செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் ஏற்படும் போது ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்கும் போது அமில உணவை நடுநிலையாக்கி நெஞ்சு எரிச்சலைச் சரி செய்கிறது.

சைனஸ்

கர்ப்ப காலத்தில் சைனஸ் பிரச்சினைகளினால் நீங்கள் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் உதவும். சைனஸ் பிரச்சனையால் இரவில் தூங்கமுடியாமல் அவதி பட்டீர்களானால் ஒரு சூடான கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடியுங்கள். சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்கலாம்.

பருக்கள்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்திற்கு விடுதலை தந்து சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆப்பிள் சீடர் வினிகர் உதவும். ஆப்பிள் சீடர் வினிகரை பருகுவதால் பருக்கள் வராமலும் மற்ற சரும பிரச்சனைகள் வராமலும் உங்களைப் பாதுகாக்கிறது.

வீக்கம்

கர்ப்ப காலத்தில் கைகள் மற்றும் கால்களில் எப்போதும் வீக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை வீக்கத்தின் மேல் தடவி மசாஜ் செய்வதினால் வீக்கத்தைக் குறைக்கலாம்.

 

உபயோகித்தல்

ஆப்பிள் சைடர் வினிகரை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பின்பு தான் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களுக்கு அலர்ஜி சம்மந்தமாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அவர்கள் தான் பரிசோதித்துக் கூற வேண்டும். எனவே மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு எடுத்துக் கொள்ளுவது சிறந்தது.

Related posts

தயிரின் அற்புதங்கள்

nathan

ஆண்மைக் குறைவை நீக்கும் சுப்பர் மருந்து!!

nathan

புதினா சர்பத்

nathan

கருப்பட்டியில் ஒரிஜினலானு கண்டறிய சூப்பரான ஐடியா!

nathan

எவ்வளோ சாப்பிட்டாலும் பசிச்சுக்கிட்டே இரு tamil healthy food

nathan

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிட்டும் உடம்பு வெயிட் போடாமல் இருப்பது எப்படி?

nathan

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

nathan

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan