24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
asthma2 1651753891
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா?

இன்றைய மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலானோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நாள்பட்ட ஆஸ்துமா ஒரு நபரின் மூச்சுக்குழாய் வீங்கி, சுற்றியுள்ள தசைகள் பதற்றமடையும் போது, ​​​​காற்றுப்பாதையில் சளி உருவாகிறது, மற்றும் காற்று சரியாக செல்ல முடியாது.

ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுத் திணறல் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். இதனால் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி போன்ற பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்ஹேலரைப் பயன்படுத்துவதே சிகிச்சை. இருப்பினும், இந்த ஆஸ்துமா பிரச்சனையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

குடைமிளகாய்
குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த குடைமிளகாயை சுவாச பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் நீங்கி, சுவாச அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளை

மாதுளையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நுரையீரலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவும். எனவே சுவாச நோய் உள்ளவர்கள் மாதுளையை தினமும் ஜூஸ் வடிவிலோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடுவது நல்லது.

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, டிஎன்ஏ சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இஞ்சி இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல நோய்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.

பசலைக்கீரை

கீரைகளிலேயே பசலைக்கீரையில் புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே, நார்ச்சத்து, பாஸ்பரஸ், தயமின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் சருமம், தலைமுடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதோடு இது ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

தக்காளி ஜூஸ்

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தவிர இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது இதய நோய் மற்றும் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இது எடை இழப்பிற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆப்பிள் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இது எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிப்பதோடு, எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக இதில் உள்ள பி வைட்டமின்கள் மன இறுக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ளன. இவை அனைத்துமே நுரையீரல் நோய்களின் அபாயத்தைக் குறைத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, மக்னீசியம், பி6 வைட்டமின், சி வைட்டமின் ஈ, ஃபோலேட் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை நுரையீரல் தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…விலகிப் போன முதுகெலும்பில் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ள ஆசனம்!

nathan

வயிற்றில் புண் ஏற்பட என்ன காரணம்?

nathan

உடலில் நாடாப்புழு உருவாவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்…!அவசியம் படிக்க..

nathan

ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்!

nathan

இந்த 5 வகையான பெண்களில் உங்களுக்கு பிடிச்ச நபர் யார்?

nathan

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் அதிகமாக காப்ஃபைனால் ஏற்படும் உடல்நல தாக்கங்கள்!!!

nathan

பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாக காரணம் என்ன? எப்படி மீளலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!

nathan