25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
download 32 300x150 615x3081
மருத்துவ குறிப்பு

செரிமானம் மற்றும் வாயு தொல்லை பிரச்சனையா..?

download 32 300x150 615x3081‘/>நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலே சொன்ன பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தாலும், பலரும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதே பிரச்சனைகள் நீண்ட காலம் நீடித்து வந்தால் அவை கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அல்சர் என்ற வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஒருசில நேரத்தில் வயிறு முழுவதையும் பாதித்துவிடும்.

உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.

சாப்பிடும் போது ஒரு முறையான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது செரிமானப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது முதலில் பழங்கள் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை சாப்பிட்டு, அதற்கு பின்பு அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை அனுமதிக்காது. மேலும் அது செரிமான பிரச்சனைகளை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
உணவருந்தும் முறையிலும் செரிமானக் கோளாறுகள் உள்ளன. எனவே நன்றாக மற்றும் வசதியாக அமர்ந்து கொண்டு, ரசித்து, ருசித்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு அமர்ந்து உணவருந்தும் போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். மேலும் அது நன்றாக செரிமானமாக வழிவகுக்கும்.

செரிமானம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். எனவே நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கிறது.
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம். தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்.

செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற, ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய் மசாஜ் செரிமானக் கேளாறை நீக்கிவிடும்.

உணவு அருந்தும் போது, குறைவான அளவு உணவை வாயில் வைத்து, அதை நன்றாகக் கடித்து, மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.

செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

உணவில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, தக்காளி, கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் அவை மலச்சிக்கலை நீக்கி எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கும்.
மிக விரைவாக செரிமானம் நடைபெற வைக்கும் உணவுப் பொருட்களான இஞ்சி, கருப்பு மிளகு, கல் உப்பு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாகச் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.

மிக எளிதாக செரிமானமாக வேண்டுமென்றால் ஒரு முறையான சாப்பாட்டு நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதே நேரங்களில் உணவை அருந்த வேண்டும். காலம் கடந்து உணவு உண்ணுதல் மற்றும் முறையான நேரம் இல்லாமல் உணவு அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
குண்டாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஆகியவை அதிகமான செரிமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். ஆகவே மருத்துவரை அணுகியோ, போதிய டயட்டை மேற்கொண்டோ எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.
இயற்கை உபாதைகள் ஏற்படும் போது உடனே கழிவறைக்குச் சென்று விட வேண்டும். அவ்வாறு செல்லாமல் அடக்கி வைத்திருந்தால், உடலில் உள்ள கழிவுகள், உடலில் பல கேடுகளை விளைவிக்கும்.

தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.
மன அழுத்தம் இருந்தால், அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத தயிரைத் தினமும் பருகி வருவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தயிர் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்குகிறது. அதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.
மாலை நேரங்களில் நமது செரிமான மண்டலத்தின் வேகம் குறைவாக இருக்கும். ஆகவே இரவு நேரங்களில் நேரம் கழித்து உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால், அது சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

nathan

சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?

nathan

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!

nathan

பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் இலகுவான வழிகள்!சூப்பர் டிப்ஸ்

nathan

ஒற்றைத் தலைவலி ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் அதிகமா வருது என்று தெரியுமா?

nathan

உங்க கண் ஓரத்தில் உருவாகும் பீழை உங்க ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா அப்ப இத படிங்க!?

nathan

கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?

nathan

அஜீரணத்தை எளிதில் குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan