தேவையானவை:
வெள்ளைப் பூசணிக்காய் – ஒரு பெரிய கீற்று (அ) 300 கிராம்
பாசிப்பருப்பு – ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு பெரிய கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 4
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1.பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை நீளமாக நறுக்கி வைக்கவும். பூசணிக்காயை சுத்தம் செய்து சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.பாசிப்பருப்பைக் குழைய விடாமல் மலர வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு, முதல் பால் தனியாகவும், இரண்டாம், மூன்றாம் பாலைத் தனியாகவும் எடுத்து வைக்கவும்.
3.நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.அதனுடன் பூசணிக்காய் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
5.பூசணிக்காய் நன்றாக வதங்கியதும் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். காய் மிருதுவாக வெந்ததும் பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி மற்றும் உப்புச் சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.
6.கடைசியாக முதல் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
7.சுவையான பூசணிக்காய் பால் கூட்டு தயார். குழம்பு சாதம், சாம்பார், ரச சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.