24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
doctor
மருத்துவ குறிப்பு

இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லையா?

இந்த நாட்களில் மிகவும் இளம் மற்றும் வளமான தம்பதிகள் கூட முதல் சுழற்சியில் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு 6-8% மட்டுமே.

இரண்டாவது கர்ப்பத்திற்கான சில எளிய உதவிக்குறிப்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள்
உங்கள் முதல் குழந்தை பிறந்த பின்னர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைவு கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் உணவு பழக்கம் சீரானதாக உள்ளதா என்பதை கவனியுங்கள். காப்ஃபைன் பருகும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். கருவுறுதலில் அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். முட்டைகள் முதிர்ச்சி அடையவும், கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கவும் இந்த பழக்கங்கள் காரணமாக உள்ளன.

போதுமான தூக்கம் அவசியம்

இரண்டாம் முறை தாயாக முயற்சிக்கும் பெண்கள் போதுமான தூக்கம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தூக்கத்தைக் குறைத்துக் கொள்பவர்கள் ஹார்மோன்களில் சமநிலை இழக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்படலாம். ஒருவேளை காலப்போக்கில் உங்களுடைய பழக்கவழக்கத்தில் ஏதாவது ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை களைய வேண்டிய காலம் இது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கணவரும் விந்தணுக்கள் அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் கணவரின் வாழ்வியல் முறைகளில் மாற்றம் தேவைப்பட்டால் அதனையும் சரி செய்யும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்

நீங்கள் ஏற்கனவே தாயாக இருப்பதால், உங்கள் கருவுறுதலை தடுக்கும் எதாவது மருந்துகள் உட்கொண்டு வரலாம். முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் ஆரோக்கியத்தில் ஏதாவது மாற்றங்கள் கருவுறுதலை பாதிக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் கருவுறும் நிலையில் பாதிப்பை உண்டாக்கலாம். கருவுறுதலுக்கு உதவும் சில மருந்துகள் எடுத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போன்றவை உங்கள் இரண்டாம் குழந்தைக்கான கவலையை நிஜமாக்க உதவும்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்

முதல் குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடல் எடையில் மாற்றம் இருக்கலாம். ஒருவேளை உங்கள் எடை கூடி இருக்கலாம் அல்லது சில கிலோ குறைந்தும் இருக்கலாம். இரண்டாவது முறை கருவுறுதலுக்கு உங்கள் உடல் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல் குறியீட்டு எண்ணுக்கு நெருக்கமான அளவில் உங்கள் உடல் எடை இருக்கும்படி பார்த்துக் கொள்வது கருவுறுதலை பாதிக்காமல் இருக்கும்.

மருத்துவ உதவியை நாடுவதில் சங்கோஜம் வேண்டாம்

இரண்டாவது முறை கருத்தரிக்க நினைப்பவர்கள் மருத்துவ உதவியை நாடுவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. கருவுற முயற்சித்து தோல்வியை தழுவும் ஒவ்வொரு ஆண்டும், கருத்தரிப்பதற்கான சாத்தியம் குறையக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் 35 வயதை விட குறைவாக இருந்து, ஒரு வருடம் தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட போதும் இரண்டாவது முறை கருத்தரிக்க முடியவில்லை என்றால், அல்லது 35 வயதைக் கடந்து 6 மாதம் தொடர்ந்து முயற்சித்தும் கருத்தரிக்க முடியவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது நல்லது. மருத்துவரிடம் உங்கள் பிரச்சனையை பற்றி பேசுவது குறித்து தயக்கம் வேண்டாம்.

கருவுறும் முயற்சியை கண்காணியுங்கள்

ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் அந்த குழந்தையை பராமரிப்பதில் நீங்கள் அதிக சோர்வடையக்கூடும். ஆகவே முதல் குழந்தை கருத்தரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தைப் போல் இரண்டாம் குழந்தை கருத்தரிப்பதில் நேரம் செலவிடுவது இயலாத காரியம். ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது ஓரளவிற்கு நன்மையைத் தரும். அவற்றில் ஏதாவது குறைபாடு இருப்பின், அவை கருத்தரிக்கும் வாய்ப்பில் தோல்வியை உண்டாக்க முடியும். குறிப்பாக நீங்கள் வளமாக இருக்கும் காலங்களில் கருத்தரிக்க முயற்சித்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

கருவுறுதலுக்கான திட்டத்தை உருவாக்குங்கள்

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் விதங்கள் மற்றும் எவ்வளவு நாட்கள் முயற்சிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு திட்டமிடுதலை நீங்கள் மற்றும் உங்கள் கணவர் இணைந்து உருவாக்குங்கள். IUI அல்லது IVF போன்ற சிகிச்சை முறைகளை பயன்படுத்துவதில் உங்கள் கருத்து குறித்து ஆலோசனை நடத்துங்கள் அல்லது முட்டை தானம் பெறுவது குறித்து ஆலோசியுங்கள். கருவுறாமை தொடர்பான பிரச்சனைக்கான சிகிச்சைக்கு நீங்கள் செலவிட விரும்பும் தொகை குறித்து ஆலோசியுங்கள்.

Related posts

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

மாரடைப்பு ஏற்படும் அச்சமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!!

nathan

உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

nathan

ஆண்கள் தூதுவளை இலையைச் சாப்பிட்டு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?..

sangika

உங்கள் முகம், உடல்நலனை பற்றி என்ன கூறுகிறது என உங்களுக்கு தெரியுமா???

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிறப்பு உறுப்பில் அறிகுறியின்றி உண்டாகும் தொற்றுகள்!

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan