கர்ப்பிணி பெண்களுக்கு

சுகபிரசவத்துக்கு என்ன வழி?

குளிர்காலம் தொடங்கினாலோ அல்லது திடீரென வானிலை மாறினாலோ வைரஸ், மலேரியா போன்ற நோய்கள் குழந்தைகள் முதல் முதியோர் வரை தாக்குவது வழக்கம். தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் தானே என்று அலட்சியமாக மருந்து கடையிலோ, கம்பவுண்டர்களிடமோ அல்லது போலி டாக்டர்களிடமோ சென்று பரிசோதனை செய்வது போன்ற தவறான செயல்களை பொதுமக்கள் அறியாமையால் செய்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசிப்பதே இல்லை. அதேபோல் இன்று பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவது என்பது அரிதாக உள்ளது. இன்றைய இயந்திரமய உலகால் உடலுழைப்பு குறைந்து போயுள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெறுவது என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு எல்லாம் சிறந்த தீர்வை வழங்க திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டார் மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் பி. ஐஸ்வரியா எம்.பி.பி.எஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவை பின்வருமாறு

காய்ச்சல் என்பதற்கான மருத்துவ குறிப்புகள் என்ன?

எந்தவொரு காய்ச்சலும் 3 நாட்கள் மேல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் எளிதான பரிசோதனைகளான CBC WIDAL COMPLETE URINE இதில் டைப்பாய்டு காய்ச்சலாக இருந்தால் WIDAL பாசிடிவை குறிக்கும். இதுவே டெங்கு காய்ச்சலாக இருப்பின் தட்டணுக்கள் குறையும். அதை ஒப்பிட்டு டெங்கு காய்ச்சல் பரிசோதனையை மருத்துவர் கண்டறிவார்.

பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு ANTIBIOTICS IM INJECTIONS போடக்கூடாது. இதை பற்றி அரசு பதிவு பெற்ற மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு மட்டுமே தெரியும். தட்டணுக்கள் 30000 கீழ் குறைந்தால் தட்டணுக்கள் TRANSFUSION செய்வது அவசியமாகும்.காய்ச்சல் தானே என்று அலட்சியமாக மருந்துக்கடையிலோ, கம்பவுண்டர்களிடமோ அல்லது போலி டாக்டர்களிடமோ சென்று பரிசோதனை செய்யாதீர்கள்.

சுகபிரசவத்திற்க்கு என்ன செய்ய வேண்டும்? எங்கு பார்க்க வேண்டும்?

அந்த காலத்தில் உடற்பயிற்சியாக துணி துவைப்பது, மாவு அரைப்பது, வீடு வாசல் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை பெண்கள் செய்தனர். அதற்கு ஏற்றார் போல் நல்ல உணவும் உண்பார்கள். இக்காலத்தில் இயந்திரங்களின் வருகையால் சோம்பலாக நாம் அனைவரும் மாறிவிட்டோம்.

விளைவு சிசேரியன் அறுவை சிகிச்சை என்ற LSCS OPERATION மூலம் குழந்தையை பெறுகிறோம். உடற்பயிற்சி, உணவுமுறை பழக்கம் நவீன மருத்துவ முறை இவை அனைத்தையும் சரியாக செய்தால் நிச்சியம் சுகபிரசவத்தை அடையலாம். எங்களது ஸ்டார் மருத்துவமனையில் சுகப்பிரவசத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து பல நவீன மருந்துகள் மூலமும், ஊட்டசத்து புரதச்சத்து உணவுகள் எதை சாப்பிட வேண்டும் என்பதையும் ஆராய்ந்து உடற்பயிற்சியின் அவசயத்தியையும் அடங்கி ஒரு சிடியை தருகிறோம்.

மேலும் எனது ஆலோசனைபடி மாதம் ஒருமுறை போடவேண்டிய தடுப்பூசிகளையும் தவறாமல் எடுத்து கொள்ளவேண்டும். 3மாதம் ஒருமுறை USG ஸ்கேன் எடுத்தல் வேண்டும். 3ம் மாதம் சர்க்கரைநோய் கண்டறியப்பட்டால் நமது மருத்துவமனையிலேயே சர்க்கரை சிறப்பு மருத்துவரின் ஆலோசனையையும் எளிதாக பெற்று சுகப்பிரவசத்தை இயன்ற அளவு முயற்சி செய்து எளிதாக்கலாம்.
ld1991

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button