என்னென்ன தேவை?
இட்லி அரிசி – 2 1/2 கப்,
துவரம் பருப்பு – 11/2 கப்,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
தனியா – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 10,
இஞ்சி – சிறிது,
பெருங்காயத்தூள் – சிறிது,
சாம்பார் வெங்காயம் – 2 கப் (உரித்து பொடியாக அரிந்தது),
கொத்தமல்லித் தழை – 1/4 கப்,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இட்லி அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தண்ணீரை வடித்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு அரைக்கவும். அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும். பிறகு பொடியாக அரிந்த வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து சூடான எண்ணெயில் வடையாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.