29 1454043216 6 heartattack
மருத்துவ குறிப்பு

இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

இன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மக்கள் நினைகின்றனர். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும். அதைக் கூர்ந்து கவனித்தால், நிச்சயம் மாரடைப்பினால் இறப்பதைத் தடுக்கலாம்.

இதய நோய்க்கான அறிகுறி ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. வேண்டுமெனில் பெண்களுக்கு 1 மாதத்திற்கு முன்பே மாரடைப்பு வரப் போகிறது என்பதை அறியலாம். மற்றபடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே அறிகுறிகள் தான். இங்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மை

நீங்கள் சில நாட்களாக மிகுதியான சோர்வு அல்லது தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் உங்கள் இதய தமனிகள் கடுமையாக குறுகியுள்ளது என்று அர்த்தம். இப்படி இதய தமனிகள் சுருங்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இதயத்தின் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். இதன் காரணமாகத் தான் நீங்கள் மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மையை சந்திக்கிறீர்கள்.

மூச்சுவிடுவதில் சிரமம்

உங்களால் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால், அதுவும் மாரடைப்பு வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் இதயம் மற்றும் சுவாச மண்டலம் ஒன்றோடொன்று சார்ந்துள்ளது. ஒருவேளை உங்கள் இதயம் குறைந்த அளவிலான இரத்தத்தைப் பெற்றால், நுரையீரல் ஆக்ஸிஜனை இழந்து, அதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

பலவீனமான தசை

உங்கள் தசை பலவீனமாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் குறையும். எப்போது ஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசைகளால் தனது முழு செயல்பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகிவிடும்.

மயக்கம், குமட்டல், வியர்வை

உங்களுக்கு சில நாட்களாக வியர்வை அதிகம் வெளியேறினாலோ, குமட்டல் அல்லது மயக்கம் வருவது போன்று இருந்தாலோ, அது இதய பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்று. அதிலும் உட்கார்ந்து திடீரென்று எழும் போது , மூளைக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல், அதன் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படுகிறது. எனவே இந்த அறிகுறிகளை சமீப காலமாக நீங்கள் சந்தித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.

மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு

நீங்கள் உங்கள் மார்பகத்தில் அசௌகரியத்தை உணர்ந்தால், அதாவது திடீரென்று மார்பகத்தில் சுரீர் என்று வலி ஏற்பட்டால், கரோனரி தமனிகள் சுருக்கமடைகிறது என்று அர்த்தம். இந்நிலையில் முதலில் அவ்வப்போது லேசான வலியை உணர்ந்து, சாதாரண நிலைக்கு வரக்கூடும். இருப்பினும் இதனை சாதாரணமாக நினைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும்.

குறிப்பு

மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால், அவற்றை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால் மாரடைப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.
29 1454043216 6 heartattack

Related posts

அடிக்கடி ஏப்பம் வருவதை தடுக்க

nathan

உனக்கு பிடித்த பழத்தின் பெயரைச் சொல்! நீ யாரென்று சொல்கிறேன்..

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பது எப்படி?

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

தெரிஞ்சிக்கங்க…தற் கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள்!!!

nathan

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!

nathan

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

எலும்புக்கு உறுதி, புற்றுநோய்க்குக் கவசம்…. வெல்லப்பாகு தரும் தித்திப்பான பலன்கள்!

nathan

பெண்களே ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்….

nathan