26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
banana roti 1649082176
சமையல் குறிப்புகள்

வாழைப்பழ ரொட்டி

தேவையான பொருட்கள்:

* கனிந்த வாழைப்பழம் – 1 (பெரியது, தோலுரித்தது)

* கோதுமை மாவு – 3 கப்

* பால் – 1/2 கப்

* உப்பு – 1 டீஸ்பூன்

* நெய் – 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பால், உப்பு, நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* பின்பு அதில் கோதுமை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

* பின் மாவை மீண்டும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

Banana Roti Recipe In Tamil
* அடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஒரு சப்பாத்தியைப் போட்டு முன்னும் பின்னும் நெய்யைத் தடவி திருப்பிப் போட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சப்பாத்தியாக போட்டு எடுத்தால், வாழைப்பழ ரொட்டி/வாழைப்பழ சப்பாத்தி தயார்.

Related posts

இஞ்சி குழம்பு

nathan

சுவையான சௌ செள கூட்டு

nathan

காலை உணவாக சாக்லேட் சாண்ட்விச்

nathan

சுவையான முள்ளங்கி கூட்டு

nathan

கொண்டைக்கடலை சமைப்பது எப்படி ? | chickpeas in tamil

nathan

வாழைப்பழ ரொட்டி

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

nathan

சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி

nathan