துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமும், புத்திக்கூர்மையும் நிறைந்தவர்கள். ஆனால் இவர்கள் தங்களின் சுயநலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும், செய்ய பயப்படும் தவறான விஷயங்களை இவர்கள் தயங்காமல் செய்வார்கள். தனது நலனுக்காக நேர்மையற்ற செயல்களில் ஈடுபட ஒருபோதும் தயங்கமாட்டார்கள். தான் விரும்பியதை பெறுவதற்காக பொய் சொல்லவோ, மற்றவர்களை ஏமாற்றவோ இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இதனை செய்வதில் இவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்களின் அப்போதைய தேவைக்காக எப்படிப்பட்ட ஒழுக்கமற்ற செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இவர்களின் நேர்மை என்பது இவர்களின் அப்போதைய தேவையை பொறுத்தே இருக்கும். தேவை இல்லாத சமயங்களில் இவர்கள் பொய் கூறமாட்டார்கள். அதுவே தேவை இருக்கும் சமயத்தில் இவர்கள் அளவற்ற பொய்களைக் கூறுவார்கள். தங்களின் வசதிக்கேற்ப தங்களின் நியாயங்களை இவர்கள் அவ்வப்போது மாற்றிக்கொள்வார்கள். இவர்களின் தேவைகளை போர்த்து இவர்களின் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் அடிக்கடி மாறும் மனநிலையால் அவர்களால் எந்த நம்பிக்கையிலும், கொள்கையிலும் உறுதியாக இருக்க முடியாது. இவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இவர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தினால் இவர்கள் உடனடியாக அதனை மாற்றிக்கொள்வார்கள். அதுபோன்ற சமயங்களில் இவர்களின் தார்மீக உணர்வு என்பது முற்றிலும் வேறாக இருக்கும். இவர்களுக்கு நல்ல செயல்களுக்கும், தவறான செயல்களுக்கும் இடையேயான வேறுபாடு நன்றாக தெரியும். இருப்பினும், தவறான செயல்களுக்கு இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரே கொள்கை பிடிப்பில் நீண்ட காலம் இருப்பது இவர்களால் முடியாத காரியமாகும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் மனக்கிளர்ச்சி மற்றும் முட்டாள்தனத்தால் அவர்களின் செயல்களின் விளைவுகள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்கள் எப்போதும் கருத்தில் கொள்ள மாட்டார்கள். இந்த விதத்தில் மேஷ ராசிக்காரர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள மாட்டார்கள். சிலசமயம் விதிமுறைகளை பின்பற்றுவது இவர்களுக்கு பிடிக்காததாக இருக்கும், அதனால் தன்னுடைய சுயஒழுக்கத்தை மீற இவர்கள் தயங்க மாட்டார்கள். தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இவர்கள் எதையும் செய்வார்கள், அதற்காக நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ள இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்கான சொந்த விதிகளை உருவாக்கி, அதற்குள் தங்களுக்குள் நிலைநிறுத்திக் கொண்டு அந்த தார்மீக நெறிமுறைகளின்படி வாழ்பவர்கள். சில நேரங்களில் அவர்களின் தார்மீக திசைகாட்டி பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் தரங்களுடன் ஒத்துப்போகிறது, சில சமயங்களில் அது அவ்வாறு இருக்காது. இவர்களின் குணநலன்களில் பல மேஷ ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவதாக இருக்கும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தம் அவர்களை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும்.