வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள்.
இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும்.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.
* மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும். மேலும் பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்து.
* தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பூண்டை பச்சையாக சாப்பிடவுடன் சற்று வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.
* ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
* எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.