23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3964
சிற்றுண்டி வகைகள்

அரைத்து செய்யும் பஜ்ஜி

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 1 கப்,
துவரம் பருப்பு 1/4 கப்,
தோசை மாவு – 3 டீஸ்பூன் அல்லது சமையல் சோடா – 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 4,
கடலை மாவு 1/2 கப்,
மல்லி – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
நேந்திரம்பழம் – 1,
கத்தரிக்காய் – 2,
வாழைக்காய் – பாதி,
பீர்க்கங்காய் – 1,
கேரட் – 1,
உருளைக்கிழங்கு – 1,
குடை மிளகாய் – 1 (நீளமாக நறுக்கியது),
பெரிய வெங்காயம் – 1 (எல்லாவற்றையும் மெலிதாக அரியவும்).

எப்படிச் செய்வது?

இட்லி அரிசி, துவரம்பருப்பை கழுவி 11/2 மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து அதனுடன் காய்ந்த மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அதனுடன் கடலைமாவு, தோசை மாவு சிறிது கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, காய்களை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சமையல் சோடா அதிகமாகி விட்டால் பஜ்ஜி எண்ணெய் அதிகம் இழுக்கும். குறைவாக இருந்தால் பஜ்ஜி கெட்டியாக இருக்கும். அதனால் அளவாக போடவும். சமையல் சோடாவிற்கு பதில் தோசை மாவு அளவாக சேர்க்கலாம்.
sl3964

Related posts

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

வெஜிடபிள் ஆக்ரட்டின்

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

பட்டர் நாண்

nathan

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

nathan

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan

சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்

nathan

மீல்மேக்கர் வடை

nathan

கோதுமை உசிலி

nathan