ஆரோக்கியம்தொப்பை குறைய

இடுப்பு சதை குறைக்க உதவும் ஜிம் உடற்பயிற்சிகள்

PW-woman-doing-abs-shutterstockஇனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அப்டமன் பென்ச் :

சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால்புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக்கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இதனால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.

டுவிஸ்டர் :

உட்கார்ந்தும் நின்றும், இடுப்பை வளைத்தும், குறைந்தது 50 முதல் 500 தடவை வரை பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் இடுப்பு மடிப்பு நீங்கும்; இடுப்புக்கு நல்ல வடிவமும் கிடைக்கும்.

ரோயிங் :

இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் பெடலில் வைத்துக் கொண்டு, பக்கவாட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கைகளால் பிடித்துக் கொண்டு இருக்கையை நகர்த்தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடுப்புத் தள்ளுவது போன்று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறைவாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.

– ஆனால் எந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் மருத்துவரை கலந்து ஆலோசித்து விட்டு பின்னர் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

Related posts

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

sangika

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

இளமை தரும் இளநீர்

nathan

உங்க காதலருக்கு உங்கள ரொம்ப பிடிக்கணுமா?

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’

nathan

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…

nathan