துவர்ப்பு – ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்பு – தசையை வளர்க்கின்றது. மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்எடைக்கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கக்கூடிய உருளை,கேரட், அரிசி, கோதுமை,கரும்பு போன்றவை தண்டு வகைகள் அதிகமாக உள்ளது.
புளிப்பு – கொழுப்பினை வழங்குகிறது. பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.
கார்ப்பு – எலும்பினை வளர்க்கின்றது. இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.
உவர்ப்பு – உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது, அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. அதோடு வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அதிகமானால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அனைவரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
ஆரோக்கியத்திற்கு எளிமையான முக்கிய குறிப்புகள்
மருந்து, மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக் கூடாது. மாலை 5 மணிக்கு மேல் கடுமையான உணவுகளை தவிர்ப்பது நன்மை. காலை வேளையில் அதிகப்படியான நீரும், இரவு வேளையில் குறைந்த அளவு நீரும் பருக வேண்டும்.
இரவு 10 மணி முதல் அதி காலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். சாப்பிட்ட உடன் படுக்கக்கூடாது. மொபைல் போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது பேசக்கூடாது. ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் ரேடியே சன் 1000 மடங்கு அதிகமாக இருக்கும். அதேபோல் இடது பக்ககாதில் போன் பேசுவதே நன்மை.
பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வாழைப்பழத்தை எடுத்து பற்களின் மீது 2 நிமிடம் மசாஜ் செய்தால் போதும், அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் பற்களை பளபளக்க செய்யும்.