paneer 1639486645
சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* கொழுப்புமிக்க பால் – 2 லிட்டர்

* தயிர் – 1/2 கப்

க்ரீன் சிக்கன் கிரேவிக்ரீன் சிக்கன் கிரேவி

செய்முறை:

* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்கு திரிந்து நீர் முழுமையாக பிரிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

செட்டிநாடு காளான் மசாலாசெட்டிநாடு காளான் மசாலா

* பின்பு ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்த, அதில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும் போது குளிர்ந்த நீரை ஊற்றி கையால் கிளறிவிட்டு வடிகட்டுங்கள்.

* பிறகு அந்த துணியை மூட்டை போட்டு நன்கு கட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றி, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 நிமிடம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்.

குறிப்பு:

* பாலை திரிய வைப்பதற்கு தயிருக்கு பதிலாக, எலுமிச்சை சாறு அல்லது வினிகரைப் பயன்படுத்தலாம்.

* பாலை திரிய வைத்து வடிகட்டிய பின்னர், குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால் பன்னீரில் உள்ள புளிப்புத்தன்மை நீங்கும்.

* வேண்டுமானால், தயாரித்த பன்னீரை உதிர்த்துக் கொள்ளலாம் அல்லது விருப்பமான வடிவத்திலும் வெட்டிக் கொள்ளலாம்.

Related posts

தேங்காய் பால் புளிக்குழம்பு

nathan

சுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி?

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

சூப்பரான மசாலா உருளைக்கிழங்கு ப்ரை

nathan

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

nathan

சுவையான சௌ செள கூட்டு

nathan

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? ஆஹா பிரமாதம்

nathan