28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
11
மருத்துவ குறிப்பு

டாக்டர்… எனக்கு ஒரு டவுட்டு!

காஸ்மெட்டிக் சர்ஜரி…காஸ்ட்லி சர்ஜரியா?

ஸ்ரீதேவியின் மூக்கு ஆபரேஷன் தொடங்கி, நயன்தாரா ஸ்லிம்மானது வரை காஸ்மெட்டிக் சர்ஜரியின் கைங்கர்யமே! அண்மைக்காலமாக ஆர்வமுடன் கவனிக்கப்படுகிற விஷயமாகவும் ஆசைப்படுகிற சிகிச்சையாகவும் மாறிவிட்டது காஸ்மெட்டிக் சர்ஜரி. அதென்ன காஸ்மெட்டிக் சர்ஜரி? அது எப்படி செய்யப்படுகிறது? எவ்வளவு செலவாகும்? ”இந்தியாவைச் சேர்ந்த சுஷ்ருதா என்ற ஆயுர்வேத மருத்துவர்தான் இந்த காஸ்மெட்டிக் சிகிச்சையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

அந்தக் காலத்தில் திருடர்கள், குற்றவாளிகள், போர்க்கைதிகள் போன்றவர்களை மூக்கை அறுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அப்போதுதான் மூக்கு மாற்று அறுவை சிகிச்சையை சுஷ்ருதா கண்டுபிடித்தார். நெற்றியிலிருந்து தசைகளை எடுத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் வெளிநாட்டவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரியை பின்பற்றி நிறைய விஷயங்களைக் கண்டிபிடித்தார்கள்.

இந்தியா உலகுக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது. அதில் காஸ்மெட்டிக் சர்ஜரியும் ஒன்று…” காஸ்மெட்டிக் சர்ஜரியை பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் டாக்டர் ஜெயப்பிரகாஷ். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல பிரபலங்களுக்கு இந்த சிகிச்சையை செய்து வருபவர் இவர்.

”பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. இதை காஸ்மெட்டிக் சர்ஜரி என்றும் சொல்லலாம். காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பிளாஸ்டிக் சர்ஜரியில் ஒரு வகை. இயற்கையாகவோ அல்லது ஏதாவது விபத்தின் காரணமாகவோ உடலில் ஏதேனும் உறுப்புகள் சேதமடைந்தால், அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்வதுதான் பிளாஸ்டிக் சர்ஜரியின் வேலை. உதாரணமாக, ஒரு மூக்கு சேதமடைந்தாலோ, ஒரு விரல் துண்டிக்கப்பட்டாலோ பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் சீரமைத்துவிட முடியும்.

காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது முழுக்க முழுக்க அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. புருவம் திருப்தியாக இல்லை, காது பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது, மூக்கு இன்னும் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும், ஒல்லியானால் அழகாக இருக்கும், இன்னும் கொஞ்சம் வெயிட் போட வேண்டும், பின்புறம் பெரிதாக இருக்கிறது என்பது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கு காஸ்மெட்டிக் சர்ஜரி ஒரு வரப்பிரசாதம்.

முகத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்களை சரி செய்வது, மார்பகம் சிறிதாக இருந்தால் பெரிதாக்குவது, தேவைப்பட்டால் சிறிதாக்குவது, பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவது… இது போல் பல பாகங்களை நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைக்க முடியும்…” காஸ்மெட்டிக் சர்ஜரியின் அடிப்படையை விளக்குபவரிடம், இந்த அழகு அறுவை சிகிச்சை தொடர்பான பிற கேள்விகளையும் முன்வைத்தோம்.

பிளாஸ்டிக் சர்ஜரியில் பிளாஸ்டிக் என்ற வார்த்தை ஏன்? பிளாஸ்டிக்குக்கும் இந்த சர்ஜரிக்கும் என்ன சம்பந்தம்?

”பிளாஸ்டிக்குக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘பிளாஸ்டிக்கோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்துதான் இந்த சர்ஜரிக்கு பிளாஸ்டிக் என்ற பெயரை வைத்தார்கள். ‘பிளாஸ்டிக்கோஸ்’ என்ற வார்த்தைக்கு ‘மோல்ட் செய்வது’ என்று அர்த்தம். பிளாஸ்டிக் சர்ஜரியே இந்த மோல்டிங் வேலைதான். ஒருவரது உடலில் ஒரு பாகம் சேதமடைந்தால், அவரது உடலில் இருந்தே வேறு ஏதாவது பகுதியில் இருக்கும் திசுக்களையோ, எலும்புகளையோ, தசைகளையோ எடுத்து சரி செய்வதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி.”

ஸ்லிம்மாவதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது?

”லைப்போசக்ஷன் என்ற சிகிச்சை மூலம் குண்டாக இருப்பவர்களின் எடையைக் குறைக்கலாம். இந்த சிகிச்சையில் உடலில் இருக்கும் கொழுப்பு அகற்றப்படும். கொழுப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன. Wall fat என்பது தோலுக்கும், தசைக்கும் இடையில் இருக்கிற கொழுப்பு மற்றொரு கொழுப்பு Organ fat .

இது வயிறு, குடல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும். இந்த Organ fat கொழுப்பை எடுக்க முடியாது. உடற்பயிற்சி, ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்வது, சரியான டயட் போன்றவற்றால்தான் குறைக்க முடியும்.

லைப்போசக்ஷன் சிகிச்சையில் தோலுக்கும் தசைக்கும் இடையில் இருக்கும் கொழுப்புதான் எடுக்கப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு கீணீறீறீ யீணீt ம், ஆண்களுக்கு Organ fatம் அதிகமாக இருக்கும். இதனால், லைப்போசக்ஷன் பெண்களுக்கே பெரிதும் பயன்படுகிறது.”

காஸ்மெட்டிக் சர்ஜரி செய்வதால் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?

”இல்லை. காஸ்மெட்டிக் சர்ஜரியால் அழகோடு, ஆரோக்கியமும் கிடைக்கிறது. தேவையற்ற கொழுப்பு அவரது உடலில் இருந்து அகற்றப்படுவதால் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எலும்பு சம்பந்தமான ஆர்த்தரைட்டிஸ் நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை போன்ற நோய்கள் வருவதும்
குறையும்.”

காஸ்மெட்டிக் சர்ஜரி காஸ்ட்லியானதா?

”காஸ்மெட்டிக் சர்ஜரி காஸ்ட்லியானது என்பது தவறான கருத்து. இருபது வருடங்களுக்கு முன்பு பிரபலங்கள் மட்டுமே காஸ்மெட்டிக் சிகிச்சை செய்து கொண்டார்கள். இன்று மக்களின் சம்பாதிக்கும் திறன் உயர்ந்திருக்கிறது. அழகுக்காக செலவு செய்வது தவறில்லை என்று நினைக்கிறார்கள். சிகிச்சை முறைகள் எளிமையாக, பாதுகாப்பானதாக மாறிவிட்டன.”

எவ்வளவு செலவு ஆகும் என்று தோராயமாகச் சொல்ல முடியுமா?

”சிகிச்சையைப் பொறுத்து செலவுகள் வேறுபடும். மார்பக சிகிச்சை ஒன்றரை லட்ச ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் வரையும், லைப்போசக்ஷன் ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரையும், மூக்கு அறுவை சிகிச்சை ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரையும் ஆகும்.”

இந்தியர்கள் என்னென்ன சிகிச்சைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்?

”உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை அகற்றி, அவர்களை ஸ்லிம்மாக மாற்றுகிற லைப்போசக்ஷனுக்குதான் முதலிடம். முடி கொட்டுகிற பிரச்னைக்கு ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்ற முடி மாற்று அறுவை சிகிச்சையை இப்போது அதிகமாக செய்துகொள்கிறார்கள். இதற்கடுத்து மூக்கு சரி செய்யும் சிகிச்சை, மார்பகத்தை அழகுபடுத்தும் சிகிச்சை, பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தளர்ந்து போகும் தசைகளை சரிசெய்யும் டம்மி டக் சிகிச்சை போன்றவை பிரபலமாகி வருகின்றன.”

காஸ்மெட்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

”காஸ்மெட்டிக் சிகிச்சை கவனமாக செய்ய வேண்டிய சிகிச்சை. ஏனெனில், ஆரோக்கியமான ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வருகிறார். அவருக்குதவறாக சிகிச்சை அளித்து அவரை நோயாளியாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதை ‘எத்திக்கல் சர்ஜரி’ என்று சொல்வார்கள். அதனால், சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களின் வயது, அவர்கள் ஏதேனும் வேறு சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருக் கிறார்களா, மாத்திரை சாப்பிடுகிறார்களா, குடும்பச்சூழல் எப்படியிருக்கிறது, எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் பார்த்துத்தான் ஒரு மருத்துவர் சிகிச்சை செய்ய வேண்டும். அதனால் எந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனமாக முடிவு செய்ய வேண்டும்!”
11

Related posts

சூப்பர் டிப்ஸ்! கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்

nathan

எச்சரிக்கை காலை எழுந்தவுடன் இதை மட்டும் பண்ணீடாதீங்க!

nathan

இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?

nathan

உப்பு, கிராம்பு, எலுமிச்சை எல்லாம் வேண்டாம், பல்லு நல்லா இருக்க இதுவே போதும்!!!

nathan

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள்!!!

nathan

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

nathan

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan