25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mushroom pasta 1615553320
சமையல் குறிப்புகள்

சுவையான மஸ்ரூம் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 3/4 கப்

* மஸ்ரூம்/காளான் – 1/4 கப்

பூண்டு ரொட்டிபூண்டு ரொட்டி

* குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உலர்ந்த கற்பூரவள்ளி இலை – ஒரு சிட்டிகை

சத்தான… ராகி பால் கொழுக்கட்டைசத்தான… ராகி பால் கொழுக்கட்டை

* மிளகுத் தூள் – 1/8 டீஸ்பூன்

* துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* மைதா – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 1/2 கப்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கொதிக்கும் நீரில் பாஸ்தாவைப் போட்டு, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் காளானை சேர்த்து கிளறி நன்கு காளான் வேகும் வரை ஒரு 3 நிமிடம் வேக வைக்கவும்.

* பின் அதில் மைதாவை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, பால் ஊற்றி நன்கு கிளறி விடவும். அப்போது கலவையானது சற்று கெட்டியாகி இருக்கும். இந்நிலையில் அதில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து கிளறி விடவும்.

* இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கிளறி, பின் அதில் மிளகுத் தூள் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மேலே சீஸ் தூவி ஒருமுறை கிளறிவிட்டு இறக்கினால், சுவையான மஸ்ரூம் பாஸ்தா தயார்.

Related posts

சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட சோயா கைமா ரெடி…..

sangika

பெப்பர் குடைமிளகாய் சிக்கன்

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா!…

sangika

சுவையான பீர்க்கங்காய் சாம்பார்

nathan

காளான் குடைமிளகாய் பொரியல்

nathan

சூப்பரான கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

nathan

பெண்களுக்கான சமையல் குறிப்புக்கள்

nathan