25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6 month baby crib
ஆரோக்கியம் குறிப்புகள்

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பதும் ஏன் அவசியம்?

பாதிக்கும் மேற்பட்ட குழந்தையிறப்பு ஊட்டச்சத்து பற்றாகுறையுடன் தொடர்புடையது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறைபாடான உணவு, அடிக்கடி நோய்வாய்படுதல். மற்றும் குறைவான அல்லது கவனமில்லாத சிறு குழந்தைகளின் வளர்ப்பு போன்றவைகள்தான் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.

கர்ப்பகாலத்தில் ஒரு பெண்ணிற்கு ஊட்டச்சத்து பற்றாகுறையோ அல்லது அவளது குழந்தைக்கு முதல் இரண்டு ஆண்டுக்குள் ஊட்டச்சத்து பற்றாகுறையோ ஏற்பட்டால் அந்த குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, மற்றும் மேம்பாடு தாமதம் ஆகலாம். இதை குழந்தை வளர்ந்த பின் சரி செய்ய இயலாது – இது குழந்தையின் ஆயுள் முழுதும் பாதிக்கிறது

முக்கிய குறிப்புகள்
ஊட்டசத்து மற்றும் வளர்ச்சி பற்றி ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமூகம் தெரிந்துகொள்வ வேண்டியது என்ன?

சிறு குழந்தை நன்றாக வளர வேண்டும் மற்றும் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை, குழந்தைகளின் எடையை ஒவ்வொரு மாதமும் கவனிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றால் ஏதோ தவறு என்று அர்த்தம்.

ஆறு மாதம் வரை சிசுவிற்கு தேவையான உணவும் பானமும் தாய்ப்பால் மட்டுமே. ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு மற்ற வித விதமான உணவுகளும் தேவை.

ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை, குழந்தைகளுக்கு ஒரு நாளில் தாய்ப்பாலுடன் 5 முறை உணவும் அளிக்க வேண்டும்.

நோயை எதிர்க்க மற்றும் பார்வையின் பாதிப்பை வராமல் தவிர்க்க குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ தேவை. அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், மெருகேற்றிய உணவுகள், தாய்ப்பால் அல்லது வைட்டமின்-ஏ மருந்துகளில் வைட்டமின்-ஏ உள்ளது.

உடல் மற்றும் புத்தி திறனை பாதுகாக்க, குழந்தைகளுக்கு இரும்பு சத்து நிரைந்த உணவுகள் தேவை. ஈரல் கொழுப்பில்லா மாமிசம், மீன், முட்டை மற்றும் இரும்பு சத்து மெருகேற்றிய உணவுகள் அல்லது இரும்பு மாத்திரைகள் போன்றவை இரும்புச்சத்தை வழங்கும்.

கற்றுகொள்ளும் குறைபாட்டை மற்றும் மேம்பாட்டு தாமதத்தை தவிர்க்கவும், அயோடைட் உப்பு அவசியம்.

உடல் நலம் சரியில்லாத போது, குழந்தைகள் தொடர்ந்து சரியாக சாப்பிட வேண்டும். சரியான பின்பு, குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை அதிகமான உணவை ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி குறித்த உபதகவல்கள்முக்கிய தகவல் 1
சிறு குழந்தை நன்றாக வளர வேண்டும் மற்றும் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை, குழந்தைகளின் எடையை ஒவ்வொரு மாதமும் கவனிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றால் ஏதோ தவறு என்று அர்த்தம்.

தொடர்ந்து எடை கூடுவது, ஒரு குழந்தை நன்றாக வளர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதற்கான முக்கிய அறிகுறி. ஒவ்வொரு முறை சுகாதார மையத்திற்கு செல்லும் போதும் குழந்தையின் எடையை பார்க்க வேண்டும்.

சாதாரணமாக முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே தரப்பட்டு வரும் குழந்தை, அந்த கால்கட்டத்தில் நன்றாகவே வளர்கிறது. தாய்ப்பாலூட்டுதல் குழந்தையை சாதாரண நோய்களிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் நல்ல உடல் மற்றும் மூளை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை தருகிறது. தாய்ப்பால் குடித்த குழந்தைகள் சுலபமாக கற்றுகொள்ளும். தாய்ப்பால் தரப்படாத குழந்தைகள் கற்றுகொள்வதில்லை.

ஒவ்வொரு இளம் குழந்தைக்கும் வளர்ச்சி அட்டை தேவை. ஒவ்வொரு முறை எடை பார்க்கும்போதும் வளர்ச்சி அட்டையில் குழந்தையின் எடையை புள்ளிகளாக குறிக்க வேண்டும், பின்பு ஒவ்வொரு முறை எடை பார்க்கும் போதும் அந்த புள்ளிகளை ஒன்றாக சேர்க்க வேண்டும். இப்படி புள்ளிகளை சேர்ப்பதால் உருவாகும் கோடு, குழந்தை எவ்வாறு வளர்கிறது என்பதை குறிக்கும். கோடு மேலே சென்றால், குழந்தை நன்றாக வளர்கிறது. கோடு சமமாக இருப்பதும் அல்லது கீழே செல்வது கவலைக்கிடமானது.

குழந்தைக்கு சீராக எடை அதிகரிக்கவில்லை என்றாலோ, அல்லது நன்றாக வளரவில்லை என்றாலோ, சில முக்கியமான கேள்விகள் கேட்கப்படவேண்டும்:

குழந்தை எத்தனை முறை சாப்பிடுகிறது? – ஒரு குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 அல்லது 5 முறை சாப்பிட வேண்டும். குறைபாடு உள்ள குழந்தைக்கு சாப்பிடும்போது அதிக உதவியும் நேரமும் தேவைப்படும்.

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா? குழந்தை உணவை சாப்பிட்டு விட்டு மீன்டும் கேட்டால் , தரப்படவேண்டும்.

குழந்தையின் உணவில் மிகவும் குறைவான வளர்ச்சி தரும் அல்லது சக்தி தரும் பாகம் உள்ளதா? குழந்தைக்கு வளர்ச்சி தரும் உணவுகள், மாமிசம், மீன், முட்டை, பீன்ஸ், கொட்டைகள், தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகும். சிறிதளவு எண்ணெய் சக்தி சேர்க்கும் சிவப்பு பனை எண்ணெய் அல்லது மற்ற வைடமின் மெருகேற்றிய சமையல் எண்ணெய்கள் சக்திகான நல்ல மூலப்பொருட்கள்.
குழந்தை சாப்பிட மறுக்கிறதா? குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவு பிடிக்கவில்லை என்றால் மற்ற உணவுகள் தரப்படவேண்டும். மெதுவாக புதிய உணவுகளை சேர்க்க வேண்டும்.

குழந்தைக்கு உடல் நலம் குறைவா? உடல் நலம் குறைவான குழந்தையை சிறிதளவு உணவு அடிக்கடி சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். உடல் நலம் சரியான பின்பு, குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழக்கத்தை விட ஒரு நேரம் கூடுதலான உணவை ஒரு வாரத்திற்கு அளிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு அதிக தாய்ப்பால் ஒரு வாரத்திற்காவது தரபடவேண்டும். குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனால், பயிற்சி பெற்ற சுகாதார அலுவலரிடம் அழைத்து சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும்.

நோயை தவிர்க்க குழந்தைக்கு தேவையான அளவு வைட்டமின்- ஏ சேர்ந்த உணவுகள் கிடைக்கிறதா?
வைட்டமின் – ஏ தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது. ஈரள், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், பனை எண்ணெய், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பலவித பச்சைக்கீரைகள் ஆகியவை வைட்டமின் ஏ உள்ள மற்ற உணவுகள் ஆகும். இத்தகைய உணவுகள் தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால், வளரும் நாடுகளில் உள்ளது போல் குழந்தைக்கு ஆண்டிற்கு இருமுறை வைட்டமின் ஏ மாத்திரை தரப்படவேண்டும்.

தாய்ப்பாலிற்கான மாற்று உணவுகள் குழந்தைக்கு புட்டியில் தரப்படுகிறதா? குழந்தை ஆறு மாதத்திற்கும் சிறியதாக இருந்தால் தாய்ப்பால் மட்டுமே தருவது சிறந்தது. ஆறு மாதத்திலிருந்து 24 மாதம் வரை அதிக ஊட்டச்சத்துகளின் மூல பொருளாக விளங்கும் தாய்ப்பாலே சிறந்ததாக விளங்குகிறது. மற்ற பால் தருவதாக இருந்தால் அதை புட்டியில் தருவதை விட சுத்தமான, திறந்த கிண்ணத்தில் தரவேண்டும்.

உணவு மற்றும் தண்ணீரும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? இல்லை என்றால் குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபடும். உணவை கழுவவேண்டும் அல்லது சமைக்கவேண்டும். சமைத்த உணவை தாமதிக்காமல் சாப்பிட வேண்டும். மிஞ்சிய உணவை நன்றாக மீண்டும் சூடுபடுத்த வேண்டும்.

தண்ணீர் பாதுகாப்பான இடத்திலிருந்து எடுக்கவேண்டும் மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான குடிதண்ணீரை சரியாக பராமரிக்கப்பட்ட, கட்டுபாடான, குளோரின் சேர்க்கப்பட்ட குழாயிலிருந்து எடுக்கவேண்டும். சுத்தமான தண்ணீரை ஆழ்குழாய் கிணறு, கைக்குழாய், பாதுகாப்பான ஏரி அல்லது கிணற்றிலிருந்து எடுக்கவேண்டும். குளம், ஓடை, கிணறு அல்லது தொட்டிகளிலிருந்து தண்ணீர் எடுத்தால் அதை கொதிக்கவைத்து பாதுகாக்கவேண்டும்.

மனித கழிவுகள் கழிவரையில் போடப்படுகின்றதா? அல்லது புதைக்கப்படுகின்றதா? இல்லையெனில் குழந்தைக்கு அடிக்கடி பூச்சி தொல்லையோ மற்ற நோயோ வரக்கூடும். குழந்தைக்கு பூச்சி தொல்லை இருந்தால், சுகாதார அலுவலரிடமிருந்து பூச்சிகொல்லி மருந்து பெறவும்.
அதிகமான நேரம் குழந்தை தனியாகவோ அல்லது பெரிய குழந்தையின் கவனிப்பில் விடப்படுகிறதா? அப்படியானால், இளம் குழந்தைக்கு பெரியவர்களிடமிருந்து அதிக கவனம் மற்றும் ஊக்கம் குறிப்பாக உணவு சாப்பிடும்போது தேவை,.

முக்கிய தகவல் 2
ஆறு மாதம் வரை சிசுவிற்கு தேவையான உணவும் பானமும் தாய்ப்பால் மட்டுமே. ஆறு மாதத்திற்க்கு பின் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு மற்ற வித விதமான உணவுகளும் தேவை.

ஆரம்ப மாதங்களில், குழந்தைக்கு அதிகப்படியான அபாயம் இருக்கும்போது, தாய்ப்பால் மட்டுமே தருவதால் குழந்தையை, பேதி மற்றும் மற்ற சாதாரன நோய்களிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். சுமார் ஆறு மாதம் ஆகும்போதுதான், குழந்தைக்கு மற்ற உணவு வகைகளும் பானமும் தேவைப்படுகிறது. தாய்ப்பாலூட்டுதல் இரண்டு வயது வரை தொடர வேண்டும்.

ஆறு மாதத்திற்கும் குறைவான வயதுள்ள குழந்தைக்கு எடை கூடவில்லை என்றால், அதற்கு மேலும் கூடுதலாக தாய்ப்பாலூட்ட வேண்டும்.

ஆறு மாதத்திற்கும் குறைவான வயதுள்ள குழந்தைக்கு மற்ற எந்த நீராகாரமும் தேவையில்லை, தண்ணீர்கூட தேவையில்லை.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் எடை கூடவில்லை என்றால், உடல் நலக் குறைவாகவும் இருக்கலாம், அல்லது தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காமலிருக்கலாம். சுகாதார அலுவலர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதிக்கலாம் மற்றும் தாய்க்கு குழந்தையை அதிகமாக தாய்ப்பால் எவ்வாறு குடிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பரிந்துரைக்கலாம்.

ஆறு மாதத்திற்கு பிறகு, சிசுவிற்கு, தாய்ப்பாலுடன் துணை உணவு என்று அழைக்கப்படும் மற்ற உணவுகள் தேவை. குழந்தையின் உணவில் தோலுரித்து, வேகவைத்து மசித்த காய்கறிகள், தானியங்கள், பருப்புகள், மற்றும் பழங்கள், சிறிது எண்ணை, மற்றும் மீன், முட்டை, கோழி இறைச்சி, மாமிசம் அல்லது பால் சார்ந்த பண்டங்களை, வைட்டமின் மற்றும் தாதுக்களுக்காக சேர்க்க வேண்டும். அதிக வகையான உணவுகள் மிகவும் நல்லது.

6 முதல் 12 மாத வயதுள்ள குழந்தைக்கு, அடிக்கடி மற்ற உணவுகள் தருவதற்கு முன்னும் தாய்ப்பால் தரவேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தை மற்ற உணவு சாப்பிட தொடங்குவதாலும், தவழ தொடங்குவதாலும் நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கிறது. குழந்தையின் கைகள் மற்றும் உணவு இரண்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

12 முதல் 24 மாதம் வயதுள்ள குழந்தைகளுக்கு உணவிற்கு பின்பும், குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்போழுதெல்லாம் தொடர்ந்து தாய்ப்பால் தரவேண்டும்.

முக்கிய தகவல் 3
ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை, குழந்தைகளுக்கு ஒரு நாளில் தொடர்ந்து தாய்ப்பாலுடன் ஐந்து முறை உணவளிக்க வேண்டும்.

முதல் இரண்டாண்டில் குறைபாடான ஊட்டச்சத்து தந்தால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, அதன் வாழ்நாள் முழுவதும் தாமதிக்கப்படலாம்.

வளர்ந்து ஆரோக்கியமாக இருப்பதர்கு, இளம் குழந்தைகளுக்கு, மாமிசம், மீன், தானியங்கள், பருப்பு, முட்டை, பழங்கள் மற்றும் காய்கறிகள், மற்றும் தாய்ப்பால், போன்ற வகை வகையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் தேவை.

குழந்தையின் வயிறு பெரியவர்களை விட சிறியதாக இருக்கும், அதனால் குழந்தையால் ஒரு வேளை உணவில் அதிக அளவு சாப்பிட முடியாது. ஆனால் குழந்தையின் சக்தி மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் அதிகம். அதனால்தான் குழந்தைகள் தேவைக்கேற்றவாறு அடிக்கடி சாப்பிட வேண்டியது முக்கியம்.

மசித்த காய்கறிகள், சிறு துண்டுகளாக்கிய மாமிசம், முட்டை அல்லது மீன் போன்றவைகளை குழந்தையின் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும். குறிப்பாக சிவப்பு பனை எண்ணை அல்லது வேறு வைட்டமின்-சேர்க்கப்பட்ட எண்ணெயை சிறிதளவு சேர்க்கலாம்.

பொதுவான பாத்திரத்தில் உணவு வழங்கப்பட்டால், சிறு குழந்தைகளுக்கு தேவையான உணவு கிடைக்காமலிருக்கலாம். இளம் பிள்ளைகளுக்கு அவர்களுடைய தட்டு அல்லது உணவு கிண்ணமோ இருந்தால், அவர்கள் தேவையானதை சாப்பிடவும், பெற்றோர் அல்லது கவனித்து கொள்வோருக்கு குழந்தை எவ்வளவு சாப்பிட்டது என்பதை அறிந்துகொள்ளவும் முடியும்.

சிறு பிள்ளைகளை சாப்பிட ஊக்குவிக்கவேண்டும், மற்றும் அவர்களுக்கு உணவையும் பாத்திரங்களையும் கையாள உதவி தேவைப்படலாம். குறைபாடுள்ள குழந்தை சாப்பிடவும் குடிக்கவும் அதிக உதவி தேவைப்படலாம்.

முக்கிய தகவல் 4
நோயை எதிர்க்க மற்றும் பார்வை பாதிப்பை தவிர்க்க குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ தேவை. நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளில், எண்ணை, முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், மெருகேற்றிய உணவுகள், தாய்ப்பால் அல்ல்து வைட்டமின்-ஏ மருந்துகளில் வைட்டமின்-ஏ உள்ளது.

குழந்தைக்கு ஆறு மாதம் வரை, தாய்க்கு தேவையான வைட்டமின்-ஏ, உணவு அல்லது மற்ற பொருட்களிலிருந்து கிடைத்தால், குழந்தைக்கு தேவையான வைட்டமின் – ஏ பெறுவதற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் – ஏ, போன்றவை உணவு அல்லது மாற்று பொருட்களின் மூலம் கிடைக்க வேண்டும்.
வைட்டமின்-ஏ, ஈரல், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், மீன் கொழுப்பு எண்ணை, பழுத்த மாம்பழம் மற்றும் பப்பாளி, மஞ்சள் நிற சக்கரவள்ளி கிழங்கு, பச்சை கீரை மற்றும் காய்கறிகள் மற்றும் கேரட்களில் கிடைக்கும்..

குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் -ஏ கிடைக்கவில்லை என்றால், மாலைக்கண் நோய் உண்டாகும் அபாயம் உள்ளது. மாலை அல்லது இரவில் பார்ப்பதற்கு குழந்தைக்கு கஷ்டமாக இருந்தால், வைட்டமின் – ஏ அதிகமாக தேவைப்படலாம். வைட்டமின் – ஏ மாத்திரை தருவதற்கு குழந்தையை சுகாதார ஊழியரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

சில நாடுகளில் எண்ணை மற்றும் இதர உணவுகளில் வைட்டமின்-ஏ சேர்க்கப்பட்டுள்ளது. வைட்டமின்-ஏ மாத்திரை அல்லது திரவ வடிவங்களில் கிடைக்கிறது. பல நாடுகளில், ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வைட்டமின்-ஏ மாத்திரைகள் விநியோகிக்கபடுகிறது.

பேதி மற்றும் அம்மை ஏற்பட்டால், குழந்தையின் உடம்பிலிருந்து வைட்டமின்- ஏ குறைகிறது. அடிக்கடி தாய்பால் தந்து வைட்டமின்-ஏ யின் அளவை சரிபடுத்தலாம். ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள், முட்டை, ஈரல் மற்றும் பால் சார்ந்த பண்டங்கள் அதிகமாக தருவதன்மூலம் சரிசெய்யலாம். பதிநான்கு நாட்களுக்கும் மேலாக குழந்தைக்கு பேதி இருந்தாலோ, அல்லது அம்மை வந்த குழந்தைகளுக்கும் சுகாதார ஊழியரிடமிருந்து பெறப்பட்ட வைட்டமின் – ஏ மாத்திரையை தரவேண்டும்.

முக்கிய தகவல் 5
குழந்தைகளுக்கு உடல் மற்றும் புத்தி திறனை பாதுகாக்க, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் தேவை. இரும்புச்சத்தின் சிறந்த மூலப்பொருட்கள், ஈரல், கொழுப்பில்லா மாமிசம், மீன், முட்டை மற்றும் இரும்புச்சத்து மெருகேற்றிய உணவுகள் அல்லது இரும்பு சத்து மாத்திரைகள் ஆகும்.
இரத்த சோகை – இரும்பு சத்து இல்லாமை – உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கும். வெளிறிய நாக்கு, உள்ளங்கைகள், மற்றும் உதட்டின் உட்புறம், உலர்ந்து போதல் மற்றும் மூச்சிரைப்பு போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகளாகும். இவ்வுலகில் இரத்தசோகை மிகவும் பொதுவான உயிர்சத்து பற்றாக்குறையாகும்.

சிசுக்கள் மற்றும் இளம் வயதுபிள்ளைகளுக்கு இலேசான இரத்த சோகை கூட அறிவு வளர்ச்சியை பாதிக்கும்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டால், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைநிறுத்துதலில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் குழந்தை தயக்கத்துடனும் ஒதுங்கியும் காணப்படும். இது குழந்தையின் கலந்துரையாடலின் எல்லையை குறைப்பதுடன் அறிவு வளர்ச்சியை பாதிக்கும்.
கர்ப்பகாலத்தில் இரத்த சோகை ஏற்பட்டால் பிரசவத்தின் போது இரத்த கசிவின் தீவிரத்தையும், நோய் தாக்கத்தின் அபாயத்தையும் அதிகரிப்பதுடன் பிரசவ நேரத்தில் தாயின் மரணதிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இரத்த சோகையால் பாதிக்கபட்ட தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைந்து பிறப்பதுடன் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறது. இரும்புச்சத்துள்ள இதர உணவுகளை கர்ப்பிணிகள் எடுத்துகொண்டால் தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

இரும்புச்சத்து, ஈரல், கொழுப்பு குறைந்த இறைச்சி, முட்டை, மற்றும் பருப்புகளில் காணப்படுகிறது. இரும்புசத்து ஊட்டமேற்றப்பட்ட உணவுகளும் இரத்தசோகை வராமல் தவிர்க்கும். மலேரியா மற்றும் கொக்கிபுழு, இரத்தசோகைக்கு காரணமாகவோ அல்லது நோயை அதிகப்படுத்தவோ கூடும்.
மலேரியா வராமல் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லியால் செரிவூட்டபட்ட கொசுவலைக்குள் தூங்கவேண்டும்.

புழுக்களால் ஏற்படும் நோய்கள், சமூக வியாதியாக காணப்படும் இடங்களில் வாழும் குழந்தைகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளை ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தரவேண்டும். நல்ல சுகாதர பழக்கங்கள் புழுக்கள் வருவதை தவிர்க்கும். கழிவறைக்கு அருகில் குழந்தைகள் விளையாடக்கூடாது. அவர்கள் அடிக்கடி கைகழுவ வேண்டும், மற்றும் பூச்சி தாக்கம் ஏற்படுவதை தவிர்க்க காலணிகள் அணிய வேண்டும்.

முக்கிய தகவல் 6
குழந்தைகளின் கற்றுகொள்ளும் குறைபாடு மற்றும் மேம்பாட்டு தாமதத்தை தவிர்க்க, அயோடைடு உப்பு அவசியம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், சிறிதளவு அயோடின் மிகவும் அவசியம். குழந்தைக்கு தேவையான அளவு அயோடின் கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது கர்ப்பகாலத்தில் அந்த குழந்தையின் தாய்க்கு அயோடின் குறைபாடு இருந்தாலோ, குழந்தை மூளைக்குறைபாடு, செவி மற்றும் பேச்சு குறைபாடுடன் பிறக்க வாய்புள்ளது, அல்லது உடல் மற்றும் மன வளர்ச்சி தாமதிக்கபடலாம்.

காய்டர், கழுத்து பகுதியின் வீக்கம், உணவில் அயோடின் குறைப்பாட்டிற்கான ஒரு அறிகுறியாகும். காய்டரால் அவதிப்படும் கர்ப்பிணி பெண்ணிற்கு, கருக்கலைவது, குழந்தை இறந்து பிறப்பது அல்லது மூளை பாதிப்புள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயம் அதிகம்.

சாதாரன உப்பிற்கு பதில் அயோடைடு உப்பு பயன்படுத்தினாலே கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அயோடின் கிடைத்துவிடும். அயோடைடு உப்பு கிடைக்கவில்லை என்றால், பெண்களும் குழந்தைகளும், சுகாதார ஊழியரிடமிருந்து அயோடினுள்ள இதர துணைப்பொருள்களைப் பெற்று கொள்ள வேண்டும்.

முக்கிய தகவல் 7
உடல் நலம் சரியில்லாத போதும், குழந்தைகள் தொடர்ந்து சரியாக சாப்பிட வேண்டும். சரியான பின்பு, குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை அதிகமான உணவை ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாத போது, குறிப்பாக பேதியோ அல்லது அம்மையோ வந்தால், குழந்தையின் பசி குறைந்துவிடுகிறது, மேலும் சாப்பிடும் உணவை அவர்களது உடல் குறைவாகவே உபயோகிக்கிறது. ஒரு ஆண்டில் இவ்வாறு பல தடவை ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சி குறைந்தோ அல்லது நின்றோ விடும்.

உடல் நலம் சரியில்லாத குழந்தையை சாப்பிட சொல்லி ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இது கடினமாக இருக்கலாம் ஏனெனில், உடல் நலம் சரியில்லாத குழந்தைக்கு பசி இல்லாமல் இருக்கும். குழந்தைக்கு பிடித்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி தருவது மிகவும் அவசியம். கூடுதல் தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம்.

உடல் நலம் சரியில்லாத குழந்தையை அடிக்கடி தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கவேண்டியது அவசியம். பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு நீர்பற்றாக்குறை, ஒரு முக்கிய பிரச்சினையாகும். திரவ உணவுகள் நிறைய குடிப்பது நீர் பற்றாக்குறைபாட்டை தவிர்க உதவும்.

உடல் நலமின்மையும், பசியின்மையும் சில நாட்களுக்கு மேல் நீடித்தால், குழந்தையை சுகாதார ஊழியரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியம். நோய் வரும் முன்பு இருந்த எடையை குழந்தை மீண்டும் அடையாத வரை அவன் அல்லது அவள் நோயிலிருந்து முழுவதுமாக குணமடையவில்லை என்று அர்த்தம்.
6 month baby crib

Related posts

ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்:-

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்!

nathan

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!

nathan

இரவில் பால் குடிக்கலாமா..?

nathan

கண்டிப்பா கவனியுங்க..! எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..?

nathan

சப்பாத்தி கள்ளி.!குழந்தையின்மை பிரச்சனையை தவிர்ப்பதற்கு..

nathan

உங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

nathan

ஒன்று முதல் 9-ம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்… தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கோங்க.! தானே பேசிக்கொள்பவரா நீங்கள்?

nathan